தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் சொத்தை அறிவிப்பது உறுதிமொழியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்

 

Assetsdeclarationதேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும், மந்திரி புசார்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உட்பட, தங்களுடைய சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்பதை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அதன் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டிஎபி சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹோன் வை எம்எசிசியை கேட்டுக்கொண்டார்.

பினாங்கு மாநில அரசு குறித்து எம்எசிசி தலைவர் சுல்கிப்ளி அஹமட் வெளியிட்ட கருத்திற்காக வோங் அவரை குறைகூறினார்.

சுல்கிப்ளி தொழிலிய முறைப்படி நடந்துகொள்ளவில்லை என்று கூறிய வேங், அவர் டிஎபி தலைமையிலான பினாங்கு அரசை இலக்காகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்றார்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சொத்துகளை அறிவிப்பதற்கு வகை செய்யும் ஒரு சட்டவிதியை அந்த உறுதிமொழியில் சேர்த்துக்கொள்ளும்படி நான் எம்எசிசிக்கு சவால் விடுகிறேன்”, என்று அந்த ஆயர் ஹீத்தாம் சட்டமன்ற உறுப்பினர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.