நஜிப்பின் வசைபாடல் அச்சத்தின் வெளிப்பாடு: வான் அசிசா பதிலடி

azizahஇன்று   காலை    உள்நாட்டு, வெளிநாட்டு   முதலீட்டாளர்கள்    முன்னிலையில்   பிரதமர்     நஜிப்    அப்துல்   ரசாக்,   பக்கத்தான்   ஹராபானைப்  படுமோசமாகத்   தாக்கிப்  பேசியதை   “வெட்கங்கெட்ட    வசைபாடல்”   என்று   எதிரணித்    தலைவர்    டாக்டர்   வான்    அசிசா   இஸ்மாயில்   வருணித்தார்.

பிரதமரின்  பேச்சில்  “அச்சத்தையும்   அதிகாரம்  பறிபோமோ   என்ற   பரிதவிப்பையும்”  கண்டதாக    அவர்   கூறினார்.

“14வது     பொதுத்    தேர்தலில்     அம்னோ/பிஎன்னை   எதிர்க்க      தயாராகிவரும்      ஹராபான்   நாளுக்கு   நாள்  வலுபெற்று    வருகிறது,  ஆனால்,    நஜிப்பின்   நிர்வாகமோ   1எம்டிபி     போன்ற   நிதி  ஊழல்கள்   என்னும்   சேற்றில்   சிக்கிக்கொண்டு    தவிக்கிறது.

“14வது   பொதுத் தேர்தலில்   பக்கத்தான்  ஹராபான்   வெற்றி   பெற்றால்   மக்களின்  பணத்தைக்   கொள்ளையிட்ட    திருடர்கள்    நீதிமுன்    நிறுத்தப்படுவார்கள்    என்ற   பயம்   நஜிப்புக்கு    வந்து   விட்டது”,  என   வான்  அசிசா   ஓர்   அறிக்கையில்   கூறினார்.