மகாதிர்: பிரதமர் பதவி இரண்டு தவணைகளுக்கு மட்டுமே

 

yrsaykuaபிரதமர் பதவிலிருக்கும் ஒருவரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பக்கத்தான் ஹரப்பன் என்ன வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது என்று இன்று பின்னேரத்தில் நடந்த ஒரு பொது கலந்துரையாடலில் முன்னாள் பிரதமர் மகாதிரிடம் கேட்கப்பட்டது.

பிரதமரின் அதிகாரத்திற்கு வரம்புகள் விதிக்கும் உறுதிமொழி ஹரப்பான் வெளியிடவிருக்கும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும். அதில் சட்டம் இயற்றுதல், ஆட்சி செய்தல் மற்றும் நீதி வழங்குதல் ஆகிய பிரிவுகளுக்கிடையிலான அதிகாரப் பகிர்வுகள் நிலைநிறுத்தப்படும் என்று மகாதிர் கூறினார்.

“அநேகமாக, பிரதமரின் பதவிக் காலத்தை இரண்டு தவணைக்கு அனுமதிக்கலாம். ஒரு தவணை (ஐந்து ருடம்) போதாது. பத்து வருடம் சரி என்று நான் நினைக்கிறேன்.

“அதற்கு சட்ட விதி நமக்குத் தேவைப்படுகிறது. பிரதமரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய மூன்றாவ்து அமைப்பு ஒன்று தேவைப்படுகிறது”, என்று அவர் மேலும் கூறினார்.

மகாதிரின் 22 ஆண்டுகால ஆட்சியில், 1981 லிருந்து 2003 வரையில், அவர் மீது நீதித்துறையை கீழறுப்புச் செய்தது, தகா நட்பு முதலாளித்துவம், எதிர்ப்பாளர்களைச சிறையிலடைப்பது, ஊடகச் சுதந்திரத்தை முடக்கியது. பொது நிதியை வீண் செலவு செய்தது போன்ற பல கு/ற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஹரப்பான் மலாய்க்காரர்களை பாதுகாக்கும்

அமனா உதவித் தலைவர் ஹுசாம் மூசா கூட்டாக ஏற்பாடு செய்திருந்த “மலாய் அரசியலின் இலக்கு” என்ற கலந்துரையாடலில் பேசிய மகாதிர், ஹரப்பான் மலாய்க்காரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் என்று அங்கிருந்தவர்களிடம் உறுதியளித்தார்.

டிஎபி பெரும்பாலும் மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களையும் தலைவர்களையும் கொண்டுள்ளது என்றாலும், அது ஹரப்பான் கூட்டணியில் உறுப்பினர் என்றாரவர்.

“நாங்கள் மலாய்க்காரர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தாத அரசாங்கத்தை அமைப்போம். ஆம், ஹரப்பானில் டிஎபி இருக்கிறது, ஆனால் அதில் மலாய்க்காரர்கள் தலைமையிலான மூன்று கட்சிகள் இருக்கின்றன.

“(எந்த ஒரு விவகாரத்திலும்) ஒரு கட்சி ஒப்புக்கொள்ள மறுத்தால், அரசாங்கத்தை அமைக்க முடியாது.

“எடுத்துக்காட்டாக, பிரதமர் நியமனத்தில் கூட்டணிக் கட்சிகளில் ஒன்று எதிர்ப்பு தெரிவித்தாலும் (டிஎபி நாடாளுமன்றlimதலைவர்) லிம் கிட் சியாங்கை டிஎபி பிரதமராக நியமிக்க முடியாது”, என்று மகாதிர் விளக்கம் அளித்தார்.

இரண்டு மணி நேரத்திற்கு நீடித்த அந்தக் கலந்துரையாடலில், மலாய்க்காரர்கள் அவர்களைப் பிரதிநிதிப்பதற்கு ஹரப்பானை அனுமதிக்க வேண்டும் என்று மகாதிர் வலியுறுத்தினார்.

“அம்னோவுக்கு மாற்றாக பெர்சத்து நிறுவப்பட்டது. அரசாங்கம் அமைப்பதற்கு அமனோவும் கூட தனித்து போட்டியிட முடியாது. அதற்கு மசீச, சரவாக் ஒன்றுபட்ட மக்கள் கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

“மலாய்க்காரர்களை பாதுகாப்பதற்கு நாம் அம்னோவை நம்ப முடியுமென்றால், அதையே பெர்சத்து (ஹரப்பானில் ஓர் அங்கமாக இருக்கையில்) செய்ய முடியும் என்பதை நாம் ஏன் நம்பக்கூடாது?”, என்று மகாதிர் வினாவினார்.