ஊழல்-எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள பினாங்கு அரசு இணக்கம்

guanபினாங்கு    அரசு,    வரும்  வெள்ளிக்கிழமை   கொம்டாரில்   நடைபெறவுள்ள   ஊழல்-எதிர்ப்பு   உறுதிமொழி   எடுத்துக்கொள்ளும்   நிகழ்வில்   கலந்துகொள்ள   மலேசிய    ஊழல்தடுப்பு   ஆணைய (எம் ஏசிசிசி)த்    தலைமை   ஆணையர்   சுல்கிப்ளி   அஹமட்டுக்கு    அழைப்பு   விடுத்துள்ளது.

மாநில      அரசு    ஊழல்-எதிர்ப்பு   உறுதிமொழி   ஆவணத்தில்  கையொப்பமிட    தயார்   என்று   கூறிய   முதலமைச்சர்    லிம்   குவான்   எங்,   அதில்   மாநில   அரசின்  நேர்மையை   வலியுறுத்தும்  10  நெறிமுறைகளும்    சேர்த்துக்கொள்ளப்பட    வேண்டும்   என்று     நிபந்தனை   விதித்தார்.

“உறுதிமொழி   எடுத்துக்கொள்ள   முன்வந்தது   ஊழலை   ஒழிக்க  நாங்கள்   உண்மையிலேயே    கடப்பாடு   கொண்டிருப்பதைப்   புலப்படுத்துகிறது. மேலும்,  பிஎன்   கட்டுப்பாட்டில்  உள்ள   ஊடகங்கள்   பினாங்கை   அரசியல்  ரீதியில்   குறைசொல்ல  இடமளிக்கவும்   நாங்கள்    விரும்பவில்லை”,  என   லிம்   கூறினார்.

அந்நிகழ்வை   எம்ஏசிசி    தானே  ஏற்பாடு   செய்யலாம்  அல்லது   மாநில   அரசாங்கத்துடன்   கூட்டாக  ஏற்பாடு   செய்யலாம்    என்றும்   அவர்   சொன்னார்.

மாநில   அரசின்  10  நெறிமுறைகளில்,   சிஏடி  கொள்கைகள் (போட்டியிடும்  தன்மை,  பொறுப்புடைமை,   வெளிப்படைத்தன்மை),  பொது   டெண்டர்  முறை,   முதலமைச்சர்,  மாநில    ஆட்சிக்குழுவினர்,   சட்டமன்ற   உறுப்பினர்கள்  சொத்து   விவரங்களை    அறிவித்தல்   முதலியவை   உள்ளிட்டிருக்கின்றன.

இவை  தவிர,   மாநில   நிர்வாகத்துறை   உறுப்பினர்கள்   அரசு   நிலங்களைப்  பெறத்   தடை   விதிக்கப்பட்டுள்ளது,  அவர்களின்  குடும்பத்தார்   மாநில   அரசின்   குத்தகைகளைப்   பெற   முடியாது,  தனிப்பட்ட    “நன்கொடைகள்”  பெற  முடியாது.

இறுதியாக,   உண்மையிலேயே    தகவல்   அளிப்போருக்குத்    தக்க   பாதுகாப்பு   வழங்கப்படும்.  அதே  வேளை,   அரசியல்   நன்கொடைகள்   வெளிப்படையாக   இருக்க   வேண்டும்,   வரவுக்குமீறிய    வாழ்க்கை   வாழும்     அரசாங்கத்    தலைவர்களுக்கு    எதிராக    நடவடிக்கை    எடுக்கப்படும்.