ஐஜிபி: அம்னோ இளைஞர்கள், பெர்சத்து இளைஞர்கள் தள்ளுமுல்லு; வெட்கப்பட வைக்கும் சில்லரை தகராறு

pettyபுத்ரா   உலக   வாணிக   மையத்தில்     அம்னோ   இளைஞர்  பிரிவினருக்கும்    பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா  (பெர்சத்து)   இளைஞர்   பிரிவினருக்குமிடையில்    நிகழ்ந்த    சிறு   மோதலை    நினைத்து   அதில்   சம்பந்தப்பட்டவர்கள்    வெட்கப்பட   வேண்டும்     என    இன்ஸ்பெக்டர் –  ஜெனரல்   அப்   போலீஸ்    காலிட்   அபு   பக்கார்   கூறினார்.

அச்சம்பவம்   தொடர்பான   விசாரணைக்கு    இதுவரை    11 பேரைப்   போலீசார்   அழைத்திருப்பதாக    இன்று   புக்கிட்   அமானில்    காலிட்    செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.

“முதலில்   விசாரணை   முடியட்டும்.  அது   ஒரு   சில்லரைத்   தகராறு”,  என்றாரவர்.

விசாரணைக்கு    அழைக்கப்பட்டவர்களின்   விவரத்தைக்   கேட்டதற்கு   அவர்களின்   பெயர்களைத்    தெரிவிக்க    வேண்டிய    அவசியமில்லை   என்றார்.

அதேவேளை    அனைவரும்   பக்குவமாக    நடந்து  கொள்ள   வேண்டும்   என்றும்  வலியுறுத்தினார்.

“நாமெல்லாம்   வளர்ந்து  விட்டோம்,  இன்னும்   சிறுவர்கள்   அல்ல.  முதிர்ச்சியைக்  காட்ட    வேண்டும்.

“இப்படி   ஒரு   சம்பவம்   நடந்துள்ளதை   நினைக்கவே   வெட்கமாக   உள்ளது”,  என  காலிட்    மேலும்   கூறினார்.

செவ்வாய்க்கிழமை,   சுமார்    30    பேர்  அடங்கிய   பெர்சத்து  இளைஞர்  குழு  ஒன்று,     அடுத்த   மாதம்     நடைபெறவுள்ள      அவர்களின்     “மறைப்பதற்கு     எதுவுமில்லை 2.0”  கருத்தரங்குக்கு      அழைப்பிதழ்     கொடுப்பதற்கு     அம்னோ   தலைமையகம்   அமைந்துள்ள    புத்ரா   உலக   வாணிக   மையம்   சென்றபோது      அம்னோ   இளைஞர்    பிரிவைச்    சேர்ந்த    சுமார்   100   பேர்     அவர்களைத்    தடுக்க   இரு  பிரிவினருக்குமிடையில்   சிறிது   நேரம்    தள்ளுமுல்லு நிகழ்ந்தது.