சிறுநீரக செயலிழப்பை தடுக்க இதை செய்திடுங்கள்

Kidney2சிறுநீரக செயல்பாட்டை சீராக்குவதற்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். அதன் அடிப்படையில் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அன்றாடம் சில உணவுகளை பின்பற்ற வேண்டும்.

சிறுநீரகத்தை பாதுகாக்க பின்பற்ற வேண்டியவை?

 

  • உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ள வேண்டும் அல்லது உப்பிற்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம்.

 

  • பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உணவின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

  • தினசரி உணவில் பயிர் வகைகள் அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

 

  • பாஸ்பரஸ் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

 

உணவில் பொட்டாசியம் சத்துக்களின் அளவை குறைப்பது எப்படி?

காய்கறிகளில் உள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்கலாம் அல்லது காய்களை துண்டுதுண்டாக நறுக்கி, ஒரு பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து பின் அதை சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியம் அளவை குறைக்கலாம்.

டயாலிசிஸ் செய்பவர்கள் பின்பற்ற வேண்டியவை?

 

  • டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழப்பதால், நிறைய புரத உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

  • மிகச்சிறந்த புரத உணவான பயிர்களை ஊற வைத்து முளைகட்ட வைத்து சாப்பிடலாம்.

 

  • தினமும் 1.4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் அதிக நீர், பழங்கள், சாம்பார், ரசம் ஆகிய உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நம் உடலிற்கு தேவையான நீர் பூர்த்தியாகும்.

-lankasri.com