‘கேரளாவிலிருந்து வந்தவர் மகாதிரின் தாத்தா, தந்தை அல்ல’ -முக்ரிஸ் ரசிகர் மன்றம் விளக்கம்

fanபொதுத்  தேர்தல்   நெருங்க,  நெருங்க,   அரசியல்வாதிகள்  ஒருவர்  மற்றவரின்  குடும்பப்  பூர்விகத்தை  எல்லாம்  அம்பலப்படுத்தத்   தொடங்கி   விட்டனர்.

நேற்று,   அம்னோ  நிகழ்வு   ஒன்றில்   பேசிய   துணைப்   பிரதமர்   அஹமட்  ஜாஹிட்  ஹமிடி,   பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)   அவைத்   தலைவர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்   இந்திய   வம்சாவளியினர்   என்று   கூறியிருந்தார்.  அதற்கு   ஆதாரமாக   அவரது   அடையாள   அட்டையில்   “Mahathir a/l Iskandar Kutty”  என்றிருப்பதாகவும்  சொன்னார்.

இதை  மறுத்த   மகாதிரின்   புதல்வர்   முக்ரிஸின்  ஆதரவாளர்  மன்றம்,  இந்தியாவின்   கேரளாவிலிருந்து   வந்தவர்   மகாதிரின்   தாத்தா     என்றும்   தந்தை   அல்ல    என்றும்  முகநூலில்   விளக்கமளித்துள்ளது.

“இஸ்கண்டார்  ஜோகூரைச்   சேர்ந்த   சித்தி   ஹாவைவை   மணந்தார்.  அவர்களுக்கு   முகம்மட்(மகாதிரின்  தந்தை)  1881-இல்   பிறந்தார்.  முகம்மட்    வான்  தெம்பாவான்  பிந்தி    வான்   ஹனாவியை   மணந்தார்.   அவர்களுக்குப்  பிறந்தவர்தான்  துன்”,  என்று   அது   கூறிற்று.