பலாப்பழத்தின் அற்புதம்: இவர்கள் மட்டும் சாப்பிடக் கூடாது

வெளிப்புறத் தோற்றத்தில் கரடுமுரடாகவும், உட்புறத்தில் கனியையும் கொண்ட முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம், மிகுந்த சுவை மற்றும் நறுமணத்தைக் கொண்டது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த பலாப்பழத்தில் பல்வேறு சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் ஏராளமாக நிறைந்துள்ளது.

பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள்?

பலாப்பழத்தில் விட்டமின் A, C, தாது உப்புக்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பி காம்ப்ளக்ஸ் மற்றும் தையமின், ரைபோஃபிளேவின், நயாசின், மெக்னீசியம் போன்றவை உள்ளது.

மேலும் இதில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் தாவர சத்துக்களான Phytonutrients பலாப்பழத்தில் அதிகம் உள்ளது.

பலாப்பழத்தின் நன்மைகள்
  • பலாப்பழத்தில் உள்ள மாவுச்சத்தான ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் பலாவின் சுவையை அதிகரித்து, நம் உடலுக்கு அதிக கலோரிகளை கொடுக்கிறது.
  • பலாப்பழத்தின் கொட்டை புரதச்சத்து நிறைந்தது, பருப்புக்கு பதிலாக இதை சாப்பிட்டு வந்தால், அது குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
  • பலாப்பழத்தில் அதிக அளவில் விட்டமின் A உள்ளதால், அது கண்கள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • பலாப்பழத்தில் உள்ள விட்டமின் C, ரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை வலிமைப்படுத்த உதவுகிறது.
  • பலாப்பழத்தில் தாது உப்புக்களில் ஒன்றான மெக்னிசீயம் அதிகம் உள்ளது. இந்த சத்தானது கால்சியம் சத்தை உடலில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
  • ரத்த அழுத்தத்தைக் குறைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய நோய்கள் வராமல் தடுத்து, தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பை சீராக்குகிறது.
  • பலாப்பழத்தில் சத்துக்கள் குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை வராமல் தடுத்து, உடலைப் பாதுகாக்கிறத என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
பலாப்பழத்தின் கொட்டையை எப்படி சாப்பிடலாம்?

பலாப்பழத்தின் கொட்டையை நீரில் போட்டு அவித்து அல்லது குழம்பு வைத்து சாப்பிடலாம். இதனால் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும்.

பலாப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

பலாப்பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளதால், நீரிழிவு நோயின் பாதிப்பு உள்ளவர்கள், பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது.

-lankasri.com