பப்பாளி சாப்பிட்டால் உண்டாகும் தீமைகள்: அதிகம் சாப்பிடாதீர்கள்

papayaமனித உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு ஆகிய இரண்டிலும் முக்கிய பங்கினை வகிக்கும் பப்பாளிப் பழத்தை அதிகம் சாப்பிட்டால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

பப்பாளியை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்?
  • கர்ப்பிணி பெண்கள் முதல் 2 மாதங்கள் பப்பாளிப் பழத்தை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதிகம் பழுக்காத பப்பாளியின் பால் கருக்கலைப்பை உண்டாக்கிவிடும்.
  • பப்பாளி காயை அதிகம் உட்கொண்டால், அது வயிற்று போக்கு அல்லது வயிற்று வலி போன்ற வயிறு தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
  • பப்பாளியில் உள்ள பெப்பெய்ன் என்சைம் அதிகளவு நம் உடலுக்கு சென்றால், அது தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • பப்பாளி பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றில் எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்கும்.
  • பப்பாளி விதையில் கார்பைன் எனும் நச்சு, நாடித்துடிப்பை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

-lankasri.com