தற்காப்பை விட தன் மானம் தான் முக்கியம்: நடிகர் கமல்ஹாசன்


தற்காப்பை விட தன் மானம் தான் முக்கியம்: நடிகர் கமல்ஹாசன்

dmkசென்னையில் முரசொலி பத்திரிகையின் 75 வது ஆண்டு பவளவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராகவும், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

இவர்கள் மட்டுமின்றி கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய கமல், நான் ரசித்த முதல் தமிழ் சிவாஜியுடையது, அதன் பின்னர் தான் தெரிந்தது அந்த தமிழுக்குச் சொந்தக்காரர் கலைஞர் என்று, இதையடுத்து அவரின் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன்.

இந்த விழாவிற்கு ரஜினி வருகிறாரா அவர் பேசுகிறாரா என்று கேட்டேன். அப்போது அவர் பேசவில்லை என்பதை அறிந்தது, பார்வையாளராக கலந்துகொள்ளலாம் என்று நினைத்தேன்.

ஆனால் தற்காப்பு முக்கியமில்லை, தன்மானமே முக்கியம்.

இவ்விழாவில் நான் கலந்து கொள்கிறேன் என்றதும், கழகத்தில் நான் சேரப் போவதைப் பற்றி கேட்கிறார்கள். நான் சேருவது என்றால் கடந்த 1989-ஆம் ஆண்டு கலைஞர் தன்னை அழைத்த போதே சேர்ந்திருப்பேன்.

இந்த மேடையில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்பவர்கள் இருக்கிறார்கள், இந்தக் கலாசாரத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்றுதான் இங்கு வந்தேன்.

திராவிடம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமோ தென்னிந்தியாவில் மட்டுமோ இருப்பது இல்லை.

சிந்து நாகரிகம் முதலே திராவிடம் உள்ளது, ஜனகனமனயில் திராவிடம் உள்ள வரை திராவிடம் இருக்கும் திராவிடம் என்பது வாக்குகளின் எண்ணிக்கை இல்லை.

திராவிடம் என்பது மக்கள் சக்தி, திராவிடத்தை யாராலேயும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

-lankasri.com

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • முகில் wrote on 12 ஆகஸ்ட், 2017, 13:54

  இவன் சில நேரங்களில் எதை பேச வேண்டுமோ அதை பேசுவதை இல்லை ,திராவிடன் திராவிடம் என்று தமிழர் மேல் சவாரி செய்தது இந்த வார்த்தையும் முக்கிய கரணம் ,

 • en thaai thamizh wrote on 13 ஆகஸ்ட், 2017, 13:40

  திராவிட முன்னேற்ற கழகம் தமிழை வளர்த்தது என்றால் அது முற்றிலும் உண்மை– நான் தமிழ் பற்று உள்ளவனாக ஆனதே கருணாநிதியின் தமிழ் வழி. அத்துடன் தமிழர் ஒற்றுமைக்கும் DMK அக்காலத்தில் மிகவும் அதிகம் செய்திருக்கிறது. அக்காலத்தில் காங்கிரஸ் வடக்கத்தியனுக்கு வால் பிடித்தது உண்மை -இன்றைய AMDK -போல். என்னுடைய பகுத்தறிவை தூண்டியதும் DMK தான். ஆனால் நம் உடன் பிறப்புகள் கொன்று குவிக்கப்பட்ட போது நாடகம் ஆடிய கருணாநிதியை நான் மன்னிக்கவே மாட்டேன்- இருந்தும் தமிழ் நாட்டின் இன்றைய நிலை என்ன? நாம் தமிழர் போன இடமே தெரிய வில்லை- தற்போதைக்கு DMK – தான் சிறிதாவது தமிழ் உணர்வோடு பகுத்தறிவுக்கு இடம் கொடுக்கும் கட்சியாக இருக்கிறது. தமிழ் நாட்டில்தான் தமிழ் பேசவே யாரும் கிடையாதே சிலரைத்தவிர.

 • abraham terah wrote on 13 ஆகஸ்ட், 2017, 19:00

  என் தாய் தமிழ், நானும் உங்களை போலத்தான்! ஆனால் இப்போது திரும்பி பார்த்தால்……. அவர்கள் இந்தியை எதிர்த்தார்களே தவிர, தமிழை அவர்கள் வளர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆங்கிலத்தை தான் அவர்கள் வளர்த்தார்கள்! வளர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை; தமிழ் நாட்டில் தமிழையே அழித்து விட்டார்கள்!

 • en thaai thamizh wrote on 14 ஆகஸ்ட், 2017, 11:09

  ஐயா abraham terah அவர்களே– DMK தமிழை அழிக்க வில்லை- எனக்கு தெரிந்தவரையில் தமிழ் நாட்டு பள்ளிகளில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. பள்ளிகளில் தமிழ் வாழாவிட்டால் வேறு எங்கு வாழும்? தமிழுக்கு எங்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது? குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எப்படி எழுதப்படுகிறது? happy birth day – மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் -என்று எழுதுவது கிடையாது. a weds b எழுதுகிறான்கள்- a வுக்கும் b க்கும் திருமணம் என்று எழுதுவது கிடையாதே? இன்னும் எவ்வளவோ நான் கூற முடியும்.தமிழுக்கு சாதாரண மக்களிடம் அங்கு மதிப்பு கிடையாது. சென்னையின் மக்களில் 35 -40 % தெலுங்கர்களாம்- மற்றவர்களில் எத்தனை % மற்ற இந்தியர்கள்? என்னைப்பொறுத்த மட்டில் அவர்கள் தங்களை தமிழர்களாக எண்ணி தமிழர்களா வாழ்ந்து தமிழுக்காக ஏது செய்தால் நான் வரவேர்ப்பேன்.

 • பெயரிலி wrote on 14 ஆகஸ்ட், 2017, 18:31

  நடமாடும் பிணம் தமிழ் வளர்த்த அழகுதான் ..இன்று தகர தமிழ் நாட்டில் (???? ) தமிங்கிலீஷ் பேச ..எழுத பட்டு வருகின்றது ..தமிழை ஆங்கில எழுத்தில் எழுதாது ஒன்று தான் மிச்சம் ..ஹி ஹி ஹி ..மெசேஜ் ..சென்ட் பண்ணுதல் … ..கமெண்ட் பண்ணுங்க ..பட்டன் க்ளிக் பண்ணுங்க ..யூஸ் பண்ணுங்க ..எல்லாம் சங்ககால தமிழ் 

 • en thaai thamizh wrote on 14 ஆகஸ்ட், 2017, 19:41

  anonymous அவர்களே– தயவு செய்து புரிந்து தெரிந்து பேசுங்கள். அங்கு தமிழ் நாறிப்போனதற்கு யார் காரணம் என்று புரிந்து பேசுங்கள்.

 • பெயரிலி wrote on 15 ஆகஸ்ட், 2017, 15:31

  யார் கரணம் ? தமிழ் மொழி சிதில அடைவது 5 வருடமா ஆட்சி  செய்த நடமாடும் பிணத்திட்கு தெரியவில்லை ? மேடையில் தமிழ் விற்ற இந்த அரசியல் வியாதிக்கு வீதிகளில் ..வர்த்தக நிலையங்களில் ,வானொலி ,தொலைக்காட்ட்சிகளில் தமிழ் அழுகுவது தெரியவில்லை ?
  சமீத்தில் அந்த இன்று ,நேற்று நாளை என்ற படத்தில் ஒரு நகை  கடை நிகழ்ச்சி ..இதில் பேசப்படும் ..மற்றும் வியாபார பலகையில் உள்ள .அழகிய தமிழ தான்  இந்த அசிங்க திராவிட கூட்டம் வரும்வரை அங்கு இருந்தது அனால் இன்று ..வெல்கம் வியூர்ஸ்
   …இது ஒரு தமிழ் YOUTUBE நிகழ்ச்சி தொடங்கும்  அறிவிப்பு ..ஒருவசனத்தில் 4 ஆங்கில சொற்கள் இல்லாமல் இந்த பிறவிகளால் பேச முடியாது பெயர் மாத்திரம் தமிழ் நாடு ..இந்தியாவில் ஆங்கில மொழியில் உயர் கல்வி கொடுக்கும் ஒரே மாநிலம் இந்த தகர தமிழ் நாடு   தான் 

 • பெயரிலி wrote on 15 ஆகஸ்ட், 2017, 17:02

  இன்று மறை  மலை அடிகள் ..வந்தால் ..தகர தமிழ் நாட்டு அழுகிய தமிழ் கண்டு நிச்சயம்  ..தற்கொலை
   செய்து  கொள்வார் .இந்த ஈன பிறவிகள் இன்னும் தங்களை தமிழர்கள் என்கின்றார்கள் ..தகர தமிழ் நாட்டில் 10 % கூட உண்மை தமிழர்கள் இல்லை ..இது முதிய ஒரு நடிகர் சொன்னது ..ஹி ஹி ஹி 

 • தேனீ wrote on 15 ஆகஸ்ட், 2017, 21:15

  பெயரில்லாத பெரியவர் தமிழ் நாட்டு தமிழ் மொழி நிலையைக் கண்டு அதிகமாகவே நொந்து போயுள்ளதாகத் தெரியுது.

  அங்குதான் அப்படின்னா இங்கும் நம்மவர் சளைத்தவர் இல்லை என்பதை நிருபிக்க 50% மேல் உண்டு.

  தமிழ் படித்து வளர்ந்த தமிழர் கூட இன்று இணையத் தொடர்பு கருவிகளின் வழி தமிழில் உரையாட விரும்பவில்லை. ஆங்கில மொழி ஆதிக்கம் அந்த அளவிற்கு நம் கண்ணை மறைத்து நிற்கின்றது. இந்த ஆங்கில மொழி என்பது ஒரு தொடர்பு கருவி மட்டுமே. ஆங்கில மலாய் மொழி தெரியாத சீனரிடம் ஆங்கிலத்தில் பேச முடியுமா?

 • பெயரிலி wrote on 16 ஆகஸ்ட், 2017, 14:35

  மலேஷியா தமிழ் பத்திரிகைகள் தமிழ் மொழியில் வருகின்றன ..தகர தமிழா நாட்டு பத்திரிகைகள் எல்லாம் தமிங்கிலீஷ் மொழியில் …தமிழ நாட்டில் ஒரு இடத்திட்க்கு வழி கேடடால் கிராமத்தில் கூட ..லேப்ட்டில் போய் ரைட் திரும்பு  என்று சொல்வார்கள் ..அந்த அளவு ஆங்கில அறிவு அங்கு அதிகம் ஹி ஹி ஹி …௬௦ ஆண்டு அரசியல் வியாதிகள் தமிழ் வளர்த்த அழகு ..தகர தமிழ் நாட்டில் இன்றைய தலைமுறைக்கு தமிழோ ..ஆங்கிலமோ ஒழுங்காக எழுத படிக்கச் தெரியாதாம் ..மனித வள நிறுவனங்களின் கருத்து இது ..இன்று ஐஸ் பெட்டியில் உள்ள நடமாடும் பிணம் தமிழை விற்று செல்வம்  சேர்த்தான் ..அனால் வளர்க்கவில்லை 

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: