இரண்டு அணுகுண்டுகளைத் தாங்கிய அதிசய மனிதர்: இவரை பற்றி தெரியுமா?

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி அமெரிக்காவால் அணுகுண்டு வீசப்பட்டது.

மூன்று தினங்களுக்கு பின்னர் நாகசாகி நகரத்தின் மீதும் அமெரிக்கா அணுகுண்டைப் போட்டது. இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முடியவில்லை.

இந்த குண்டு வீச்சினால் ஹிரோஷிமாவில் மட்டும் சுமார் 1,40,000 பேர் இறந்திருப்பதாகவும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்துள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு குண்டுகளிலும் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டை சேர்ந்த சுடோமு யமாகுச்சி என்பவர் 90 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட போது, சுடோமு அங்குதான் இருந்துள்ளார். வியாபார நிமித்தமாக சென்றிருந்த அவர், வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்த போது தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அன்றைய தினம் அவர் முழுவதும் விமான தளத்தில் பதுங்கியிருந்து மறுநாள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

உயிர் தப்பித்த மகிழ்ச்சியில் சொந்த ஊருக்கு சென்ற அவரை காவு வாங்க Fat boyகாத்திருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை. சொந்த ஊரான ஹிரோஷிமாவில் சுடோமு கால் வைத்தவுடனே அங்கு fat boy அணுகுண்டு வீசப்பட்டுள்ளது.

சுடோமுவின் இருப்பிடத்திற்கு சற்று அருகில்தான் அந்த குண்டு வீசப்பட்டது.74 ஆயிரம் உயிரை காவு வாங்கிய அந்த அணுகுண்டு தாக்குதலில் இருந்தும் சுடோமு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இதையடுத்து அணுகுண்டு விசப்பட்டு 60 ஆண்டுகள் கழித்து, சுடோமுவின் 90வது வயதில், இரண்டு அணுகுண்டுகளையும் தாங்கிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு மூலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டார். அந்த அணுகுண்டு தாக்குதலில் சுடோமுவின் தன்னுடைய ஒரு காதின் கேட்கும் திறனை சற்று இழந்திருந்தார்.

அணுகுண்டின் கதிர்வீச்சால் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட பலரும் பிற்காலங்களில் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், 93 வயது வரை வாழ்ந்த சுடோமு 2010ம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

-lankasri.com