சுஹாகாம்: சட்டப் பிரிவு 88ஏ இல்லாமல் எல்ஆர்ஏ நிறைவேற்றப்பட்டது ஏமாற்றமளிக்கிறது

suhakamபுதன்கிழமை    மக்களவையில்,  சட்டப் பிரிவு  88ஏ  மீட்டுக்கொள்ளப்பட்ட  நிலையில்    சட்டச்  சீர்திருத்த(திருமணம்  மற்றும்  மணவிலக்கு)ச்  சட்ட (எல்ஆர்ஏ)த்   திருத்தம்   நிறைவேற்றப்பட்டிருப்பது   ஏமாற்றமளிப்பதாக   மனித  உரிமை   ஆணையம்(சுஹாகாம்)   கூறியது.

“திருத்தப்பட்ட     சட்டத்தில்   மணவிலக்கு,   மணம்புரிந்துகொண்டவர்களின்   சொத்துகளைப்  பங்கிட்டுக்கொள்ளல்  போன்ற விவகாரங்களில்   சில   முன்னேற்றங்கள்  காணப்படுவது    உண்மைதான்.

“ஆனால்,   பலரது    வாழ்க்கையையும்     பல   பிள்ளைகளின்    எதிர்காலத்தையும்   பாதிக்கக்கூடிய    மைய  விவகாரமான   ஒருதலைப்பட்சமாக   குழந்தைகளை  மதமாற்றும்  விவகாரம்,   அதற்கு   தீர்வுகாணப்போவதாக    அரசாங்கம்     அறிகுறிகள்    காட்டியது  என்றாலும்    எந்தத்   தீர்வும்   காணப்படாமல்  அப்படியேதான்   இருக்கிறது”,  என  சுஹாகாம்   தலைவர்   ரசாலி   இஸ்மாயில்     இன்று    ஓர்    அறிக்கையில்    கூறினார்.

சட்டத்  திருத்தத்திலிருந்து   நீக்கப்பட்ட    பிரிவு  88ஏ,   குழந்தைகள்  ஒருதலைப்பட்சமாக   மதம்   மாற்றப்படுவதைத்   தடுப்பதற்குப்  மிகவும்   பயன்பட்டிருக்கும்    என  ரசாலி   கூறினார்.