அமெரிக்கா மீதான தாக்குதல் திட்டத்தை பகிரங்கப்படுத்திய வடகொரியா!

north_south_001அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் குவாம் தீவை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த போவதாக அண்மையில் வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தாக்குதல் தொடர்பான திட்டத்தை வடகொரியா தற்போது பகிரங்கப்படுத்தியுள்ளது. அந்த வகையில், வடகொரிய மக்கள் இராணுவத்தினால் ஏவப்படும் ஹவஸோங் 12 ஏவுகணைகள் 1065 செக்கனில் தாக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் ஷிமன், ஹிரோஷிமா மற்றும் கொய்சி பிராந்தியங்களுக்கு மேலாக 3365 கிலோ மீற்றர் வானில் பறந்து குவாமிலிருந்து 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வரையான தூரத்தில் தாக்குதல் நடத்தும் என வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஹவஸோங் 12 ஏவுகணைகள் வடகொரியாவால் உள்நாட்டில் விருத்தி செய்யப்பட்ட நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு எதிராக போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 -tamilwin.com