பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

 

Pheedetainedமலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) கைது செய்யப்பட்ட பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ ஐந்து நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற பதிவாளர் அமீரா மாஸ்துரா காமிஸ் இந்த உத்தரவை இட்டார்.

காலை மணி 10 அளவில் போலீஸ் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட பீ கைவிலங்கிடப்பட்டிருந்தார். அவரை அவரது மனைவி, சகோதரர் மற்றும் ஆதரவாளர்கள் சந்தித்தனர்.

பினாங்கு, பினாந்தியில் சட்டவிரோதமாக இயங்கிய ஒரு தொழிற்சாலைக்கு கடிதங்கள் வழங்கியதன் வழி அதிகார அத்துமீறல் புரிந்ததற்காக பீ பூன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வழக்குரைஞர்கள் ஆர்எஸ்என் ராயர், ராம்கர்பால் சிங் டியோ மற்றும் கே. பார்த்தீபன் ஆகியோர் பீ பூனை பிரதிநிதித்தனர்.