கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு? தோண்ட தோண்ட கிடைக்கும் தமிழ் இனத்தின் பொக்கிசங்கள்.

azhagan-kulam1

Azhagankulam Excavation: கிழடியை மிஞ்சும் அளவிற்கு தோண்ட தோண்ட அறிய பொக்கிசங்கள் கிடைப்பதால் அழகன்குளம் அகழாய்வு கீழடியை காட்டிலும் தொன்மை பெரும் என அதன் இயக்குனர் கூறியுள்ளார்.

தமிழக அரசின் தொழிலியல் துறை மூலமாக பல்வேறு இடங்களில் அகழாய்வு நடத்தி பண்டையகால தமிழ் மக்களின் வரலாறுகளை ஆவணப்படுத்தி வருகிறது.

இதன் மூலம் பண்டைய கால தமிழர்களின் வாழ்கை, கலாச்சாரம், பண்பாடு,வணிகம், எழுத்தறிவு, அயல்நாட்டு உறவு போன்ற பல அறிய தகவல்கள் தெரிய வருகின்றது.

இதன் அடிப்படையில் ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள அழகன்குளம் கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்பட்டு 7 கட்டமாக நடந்தேறியது.

இதன் மூலம் இந்நகரம் பண்டையகாலத்தில் மிகப்பெரும் வணிக நகரமாக இருந்துள்ளது கண்டுபுடிக்கப்பட்டுள்ளது.

அழகன்குளத்தில் 1986 – 1987 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொண்டங்கப்பட்டு 1990 – 1991 , 1993 – 1994 , 1995 – 1996 , 1996 – 1997 , 1997 – 1998 , 2014 -2015 ஆகிய வருடங்களில் 7 கட்டமாக அகழாய்வு பணிகள் நடந்து வந்தது.

azhagan-kulamஅழகன்குளத்தில் நடந்த அகழாய்வில் மூலம் இங்கு பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய ஆபரண அணிகலன்களான சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள், கண்ணாடியால் ஆன மணிகள், விளையாட்டு பொருட்கள், இரும்பால் ஆன பொருட்கள்,

தமிழர் இழந்த கடல்பரப்பு (மத்திய தரைக்கடல் பகுதி) நாடுகளோடு கொண்ட வணிகம் தொடர்பான மண்பாண்டங்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண் பண்டங்கள் ஆகிய அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியின் சிறப்பை உணர்ந்து, அதை மறைக்க நினைத்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா(சொத்து குவிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளி) அவர்கள் 110 விதியின் கீழ் அடுத்தகட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறும் என்று மசோதா(சட்ட)மன்றத்தில் 2016 ஆம் ஆண்டு அறிவித்தார்.

இதனடிப்படையில் கடந்த மே மாதம் 55 லட்சம் ருபாய் செலவில் தொழில் துறையினர் அழகன்குளம் அரசுப்பள்ளியில் தங்களது பணியினை தொடங்கினர்.

தற்போது அரசுப்பள்ளி அருகிலுள்ள தனியார் பட்டா நிலங்களில் அகழாய்வு நடந்து வருகின்றது.

azhagan-kulam45மேலும் இதன் இயக்குனர் கூறுகையில் இப்பகுதியில் 4 மாதத்தில் அகழாய்வு பணிகள் முடிவு பெரும் என்று கூறினார் அதனடிப்படையில் இந்த மாதம் பணிகள் நிறைவு பெற இருந்த நிலையில் மழையின் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து இதன் இயக்குனர் பாஸ்கரன் கூறுகையில் கிழடியை மிஞ்சும் அளவிற்கு இங்கு 20000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அதிக அளவிலான யானை தந்தத்திலான அணிகலன்கள், சுடுமண்ணாலான சிற்பங்கள், சங்கினாலான அணிகலன்கள் முதலிய பொருட்கள் கிடைத்துள்ளன எனவும்,

அதை ஆவண படுத்தி ஒருசிலவற்றை தற்போது காட்சிப்படுத்தப்படும் எனவும் கூடிய விரைவில் அணைத்து பொருட்களும் ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் இதுகுறித்து பொறுப்பாளர் சக்திவேல் கூறுகையில் அங்கே எங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத காரணத்தினால் அணைத்து பொருட்களும் உடையாமல் கைப்பற்றியதாகவும் குறிப்பாக கழுத்தில் அணியும் மணி கடுகைவிட சிறியதாகவும் தலைமுடி கூட நுழையமுடியாத அளவு அதில் ஓட்டை போடு நூல் கோர்த்து பண்டைய தமிழர்கள் அணிந்துள்ளனர் என்று கூறினார்.

மேலும் தமிழர்கள் இயற்கையை வணங்கியதால் எந்த ஒரு கடவுள் சிற்பங்களோ கடவுள் வழிபாடு சார்ந்த பொருட்களோ கிடைக்கவில்லை என்று கூறினார்.

கடலாலும் காலத்தாலும் சூழ்ச்சியாலும் அழிக்கப்பட்ட தமிழர்களின் வரலாறு தோண்ட தோண்ட கிடைக்கும் பொக்கிசங்கள் தமிழன்தான் உலகின் மூத்த குடி என்பதை உணர்த்துகின்றது.

அனால் தமிழனின் பெருமை உலகிற்கு தெரியாமல் இந்திய மத்திய அரசாங்கம் அதை தடுத்து வருகின்றது குறிப்பாக இந்திய தொல்லியல் துறைக்கு முன்னோடியாக இருந்த தூத்துக்குடி அருகே உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் இந்திய அரசாங்கத்தால் வெளியிடவில்லை.

மேலும் கீழடி அகழ்வாராய்ச்சியும் பெரும் போராட்டத்தின் பின் தான் நடந்து வருகிறது இந்நிலையில் தற்போது அழகன்குளம் ஆய்விலும் பல அரிய பொக்கிஷங்கள் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகளையாவது மக்கள் விரோத இந்திய ஒன்றியமும் இந்திய அரசாங்கமும் வெளியிடுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்காக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் இல்லையெனில் தமிழனின் வரலாறுகள் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் மாற்றி எழுதப்பட்டும் விடும் என்பதில் ஐயம் இல்லை மேலும் தமிழகத்தில் அருங்காட்சியகம் அமைத்து அணைத்து பொருட்களும் தமிழகத்திலே காட்சிப்படுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்திற்கு தமிழர்கள் கோரிக்கை வைக்க வேண்டும்.

-senkettru.wordpress.com

TAGS: