இந்தியர்களின் வாக்குகளை எங்களால் பெற முடியும், ஹிண்ட்ராப் நம்பிக்கை


இந்தியர்களின் வாக்குகளை எங்களால் பெற முடியும், ஹிண்ட்ராப் நம்பிக்கை

001எதிர்வரும் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக இந்தியர்களின் வாக்குகளைச் சேகரிக்க, ஹிண்ட்ராப் இயக்கத்தால் முடியுமென அதன் தலைவர் பொ.வேதமூர்த்தி கூறியுள்ளார்.

இன்று, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீருடன் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பின், பக்காத்தானுக்கு ஆதரவாக இந்தியர்களின் வாக்குகளைக் கவர, ஹிண்ட்ராப் முக்கியப் பங்காற்றுமென வேதமூர்த்தி ஃப்.எம்.தி.யிடம் தெரிவித்துள்ளார்.

“பக்காத்தானோடு எங்களை இணைத்துகொண்டால், அது அவர்களுக்கு அனுகூலமாக இருக்கும். கிராமப் புற இந்தியர்களின் வாக்குகளைப் பெற, நாங்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு உதவுவோம்,” என்றார் அவர்.

இன்று, சுமார் 1 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில், முன்னாள் அமைச்சர் ஸைட் இப்ராஹிம் மற்றும் சனுசி ஜூனிட் இருவரும் உடன் கலந்துகொண்டனர்.

“கடந்த பொதுத் தேர்தலில், அம்னோவிடம் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த கிராமப்புற இடங்களை, குறிப்பாக, கெடா, ஜொகூர், பேராக் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில், இம்முறை பக்காத்தான் கைப்பற்ற ஹிண்ட்ராப் உதவுமென அவர் கூறினார்.

“உதாரணத்திற்கு, கடந்த தேர்தலில், கெடா மெர்போக் நாடாளுமன்றத் தொகுதியில், 4,122 வாக்குகள் Waytha_najibnabikai_600வித்தியாசத்தில் பாரிசான், கெஅடிலானை வெற்றிக் கொண்டது. அங்கு 15,000 இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆக, அத்தொகுதியில் நுழைந்து, இந்தியர்களின் ஆதரவைப் பக்காத்தான் பக்கம் திருப்ப முடியும்,” என அவர் விளக்கினார்.

13-வது பொதுத் தேர்தலில், இந்தியர்களுக்கு உதவுவோம் என நஜிப் கொடுத்த வாக்குறுதியை நம்பி, பாரிசானுக்கு ஆதரவு கொடுத்ததாக வேதா கூறினார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றாததால், தான் அங்கிருந்து விலகியதாகவும் அவர் தொடர்ந்து கூறினார்.

அதன் பிறகு, கிராமப்புற இந்தியர்களைச் சந்தித்தபோது, பெரும்பாலும் அவர்கள் நாட்டின் பிரதானப் பொருளாதாரத் திட்டங்களிலிருந்து விலக்கப்பட்டே இருப்பது தெரிந்தது.

“பின் தங்கிய நிலையில் வாழும் இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நாம் பூர்த்திசெய்ய வேண்டும். பாரிசான் மாற்றத்தைக் கொண்டுவரும் என நாங்கள் நம்பவில்லை, அதனால், பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து அதனைச் செய்ய விரும்புகிறோம்”, என வேதமூர்த்தி கூறினார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • தேனீ wrote on 18 ஆகஸ்ட், 2017, 8:57

  மீண்டும் அந்தர் பல்டி அடிக்க வேண்டாம்!

 • singam wrote on 18 ஆகஸ்ட், 2017, 8:59

  நான் நஜிப்பின் ஆதரவாளன் அல்ல. இருந்தாலும்,இன்றைய நிலையில் ஓரளவுக்கு நஜிப் இறங்கி வந்து இந்தியர்களுக்கு கொஞ்சம் செய்துகொண்டிருப்பதாக அறிகிறேன். ஆனால், இந்தியர்கள் விஷயத்தில் நஜிப்பை விட படு மோசமானவன் இந்த மகாதிமிர். மலைப்பாம்பு வாயிலிருந்து மீண்டு வந்து, முதலை வாயினுள் தஞ்சம் புகுவதா? (என் கருத்து தவறாகவும் இருக்கலாம், எதற்கும் நன்கு யோசித்துப் பாருங்கள்}

 • beeshman wrote on 18 ஆகஸ்ட், 2017, 11:07

  எல்லாம் காற்றில் பறக்கும் பட்டத்தின்மேல் எழுதிய எழுத்துக்கள் போல்தான் ! ஏட்டுச்சுரைக்காயை காகிதத்தில் வரைந்து கையில் கொடுப்பவர்கள். அன்று கூன் விழுந்த சமுதாயத்தை நிமிர்த்தப் போகிறேன் என்று ஒரு மாமேதை புறப்பட்டார். கொஞ்சநஞ்சம் சமுதாயத்திற்கு கிடைத்ததையும் சுருட்டிக்கொண்டு சமுதாயத்தையும் சுரண்டி நிரந்திர கூனாக்கி, சாதனைப் படைத்தார். வெள்ளாடு உருவில் திரியும் குள்ள நரிகள். நம்மை நாம் நம்புவோமாக.

 • TAPAH BALAJI wrote on 18 ஆகஸ்ட், 2017, 11:32

  ஹிண்ட்ராப் புகழ் வேதமூர்த்தி நஜிப்போடு இணக்கமாக போனதால்
  பலரின் விமர்சனங்களுக்கு ஆளானாலும் அவரின் அந்த முடிவு
  சமூதாய நலன் கருதி எடுத்த விவேகமான முடிவு என்று அரசியல்
  நிபுணர்களால் பாராட்டப்பட்டார் ! அவரும் அவருடைய பங்குக்காக
  ஒரு நலத்திட்டத்தை பிரதமர் நஜிபின் பார்வைக்கு கொண்டுசென்றார்.
  உடனே வெற்றிக்கனியை பறிப்பதற்கு அரசியல் கலம் ஒரு விளையாட்டு
  தலம் அல்ல என்பதை மறந்து அவரின் சுயநல போக்கினால் கொடுத்த
  பதவிகளில் இருந்து விலகி நம் சமூதாயத்திற்கு மீண்டும் ஒரு பெரிய
  ஏமாற்றத்தை வெகுமதியாக கொடுத்தார்! இப்படியே காலம் போய்
  கொண்டிருந்தால் எதிர்காலத்தில் பிற இனத்தவரின் பார்வைக்கு
  நாம் ஒரு கேலிக்கூத்தான சமூதாயமாக மாறாமல் இருக்க,சமூதாயதில்
  இருக்கும் சான்றோர்களும்,படித்தவர்களும், இந்த சமூதாயத்தின்பால்
  அக்கறை உள்ளவர்களும்,இனிமேலும் ம.இ.கா.வையும்,பிறகட்சிகளையும்
  நம்பாமல், தேசிய அளவில் ஒரு மாபெறும் அரசு சாரா பேரியக்கம்
  ஆரம்பித்து, அதற்கு தியாக சிந்தனை கொண்ட தலைவர்களை நியமித்து
  இனிமேலாவது இந்த சமூதாயம் உயர ஏதாவது செய்யமுடிகிறதா என்று
  சிந்தித்து செயல் படுவோம்,

 • Beeshman wrote on 18 ஆகஸ்ட், 2017, 11:36

  மன்னிக்கவும், சுரைக்காயை காகிதத்தில் வரைந்து கையில் கொடுப்பவர்கள்.

 • Dhilip 2 wrote on 18 ஆகஸ்ட், 2017, 17:01

  5 HINDRAF முன்னோடிகளையும் அழைத்து பேசுங்கள் ! கட்டாயம் உதய குமார் , உங்களது சகோதரர் இருக்க வேண்டும் ! இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள் ! ஆப்பு இந்தியர்களினால் தான் வைக்க முடியும் என்று 22 வருடம் மலேஷியாவை ஆண்ட ஒரு இந்தியன் நினைக்கிறான் என்றால் , அதில் உண்மை இருக்கிறது ! ஒன்று கூடி உரை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாத்துங்கள் … உங்கள் தவறுகள் எல்லாம் மறக்கப்படும் … மறைக்கபடும் வரலாட்ரில் ! ஆனால் உண்மையில்லாமல் எந்த ஒரு காயையும் நகத்தாதீர்கள் !

 • TAPAH BALAJI wrote on 18 ஆகஸ்ட், 2017, 17:15

  singam அவர்களே !உங்கள் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

 • ஆதி wrote on 18 ஆகஸ்ட், 2017, 18:24

  சிங்கம் மற்றும் தாப்பா பாலாஜி அவர்கள் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.
  அத்துடன் திலிப் அவருடைய கருத்து சிந்திக்க
  கூடியவை.

 • பெயரிலி wrote on 19 ஆகஸ்ட், 2017, 9:34

  போடா டேய்

 • பெயரிலி wrote on 19 ஆகஸ்ட், 2017, 9:55

  என்று மகாதிரையே மலைக்காரர் அல்லர் என்று சொல்லப்படடாரோ அன்றே அவர் தான் மற்ற இனத்திற்கு செய்த துரோகத்தை உணர்ந்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்த மாற்றம் யாவரும் மலேசியர் என்று உணர்ந்து மக்கள் யாவரும் இனப்பாகுபாடு இன்றி அவர் இந்த மண்ணை விட்டு மறையும் முன் செய்ய வேண்டியவை. இதனை அவரும் உணர்ந்து செயல் படுவார் என்று நம்புவோமாக.
  வேதமூர்த்திய்…..என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் தன்சுயநலத்துக்காக யாரையும் பாலி கொடுக்க தயங்காதவர். இந்த அரசை மீண்டும் பதவியில் அமர்த்தி மலேசியாவை மேலும் அமாவாசையாக துணை போகத்திற் நண்பர்களே.

 • மன்னன் wrote on 19 ஆகஸ்ட், 2017, 9:58

  மாற்றம் தேவை. மகாதீர் உணர்ந்து செயல் படுவார் என்று நம்புகிறேன்

 • RAHIM A.S.S. wrote on 19 ஆகஸ்ட், 2017, 10:37

  60 ஆண்டுகளாக எதையாவது சொல்லி இந்தியர்களின் வாக்குகளை பெற்றுவிட்டு (ஹிண்ட்ராப்  மட்டுமல்ல அனைத்து இந்திய அரசியல் கட்சிகள், பொது இயக்கங்கள், அரசு  சாரா இயக்கங்கள் , ஜாதி சங்கங்கள் உட்பட) ,  
  தேனீ கூறுவதைபோல் மீண்டும் மீண்டும் அந்தர் பல்டி அடிக்காமல் இருந்தால் அதுவே இந்திய சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் அளப்பரிய சேவையாகும்.

 • siva wrote on 20 ஆகஸ்ட், 2017, 7:49

  மக்கள் செம்மறி ஆடு. வேட்ப்பாளர் 1 . நாரி 2 . புலி நடுவர் சிங்கம் . இதில் யார் வென்றாலும் முடிவு ஒன்றுதான். நீங்க சாகப்போறது உறுதி. அது எந்த வேட்ப்பாளர் கையில் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். இதுதான் இன்றய அரசியல். ஒருவர் மெல்ல மெல்ல சாகடிப்பர் ; மற்றவர் துடிதுடிக்க சாகடிப்பார். நம்மை காக்க நாம்தான் முன்வர வேண்டும். நரியும் புலியும் நம் காவலர்கள் / தலைவர்கள் அல்ல. ஆழமாக சிந்திப்பது நல்லது. தவறு இருப்பின் மன்னிக்கவும்.

 • ஜி. மோகன்- கிள்ளான் wrote on 20 ஆகஸ்ட், 2017, 13:43

  உங்களின் திடமன போராடதை ஆதரிக்கிறேன் இருப்பினும் முன்பு செய்த தவறை மறுபடியும் செய்ய வேண்டாம். ஒரு முறை மன்னிக்கலாம் மறுபடியும் நீங்கள் செய்யமாட்டிர்கள் என்று நினைக்கிறன். உங்களுடன் திரு. உதயகுமார் அவர்களையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறன். உங்களின் கடந்தகால போராட்டம் ஒரு வகையில் வெற்றிதான்.

 • புலி wrote on 20 ஆகஸ்ட், 2017, 14:00

  மகாதீர் என்ற மூசாங் பூனை மொழி விவகாரத்தில் ஏற்கனவே சீகியூவ் என்னும் சீன எலியுடன் தேர்தலுக்காக கூட்டு அமைத்து வெற்றிப் பெ ற்றவுடன் விரட்டி விட்டது. சென்ற தேர்தலில் வேதா நஜிப் என்ற பூனையுடம் ஏமாந்த சோனகிரி. ஆக புதிய கூட்டில் மூசாங் பூனையுடன் எலியா? வேடிக்கை,. இதனால் இந்தியர்களுக்கு விளையப்போவது எதுமில்லை.

 • Dhilip 2 wrote on 20 ஆகஸ்ட், 2017, 23:53

  கருத்து எழுதும் அனைவரும் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் : ANWAR IBRAHIM ஒரு முறை 7 மணிக்கு மணியடிக்கும் இந்து கோவில்களை முடிவிடுவேன் என்று மிரட்டி , பின் அவரே UMNO வால், உட் பூசலில் பிழிந்தெடுக்க பட்டு , பிறகு இந்தியர்களின் மட்ட்றும் சீனர்களின் ஆசிர்வாதத்தால் வென்று, பல்லின மக்களின் வாழ்வாதாரங்களை புரிந்து கொண்டார் ! இதே நிலை தான் இந்த 22 ஆண்ட இந்தியர் வம்சாவளி மகாதீர்க்கும் இப்பொழுது . எனவே தெரியாதே தேவதையை நம்புவதை விட நமக்கு தெரிந்த இந்த பிசாசுக்களே தேவலாம். எனவே எல்லோரும் HINDRAFIN வெட்ரிக்கு பாடு படும்படி அழைப்பு விடுக்கிறேன். MIC என்னும் சாத்தானை விரட்டியடிக்க , இந்தியர்களின் ஓற்றுமையை பலப்படுத்து நாம் நம் நண்பர்கள் , உறவினர்களுக்கு , தெரிந்தவர்களுக்கு நமது தொலைபேசி மூலம் ஆதரவு திரட்டுவோம். அதுவும் இப்பொழுதே !

 • தேனீ wrote on 21 ஆகஸ்ட், 2017, 13:01

  ம.இ.க. தெரிந்த பிசாசு. ஹின்றாப் தெரியாத தேவதையா?

 • Dhilip 2 wrote on 21 ஆகஸ்ட், 2017, 22:28

  தேனீ அவர்களே, வாத சுருக்கம் இதுதான் :
  “ANWAR அண்ட் MAHATHIR தெரிந்த பிசாசு ! NAJIB அண்ட் ZAHID தெரியாத தேவதைகள் ! “

 • தேனீ wrote on 22 ஆகஸ்ட், 2017, 10:08

  நம்பிக்கை நாயகனும் அவனுக்குத் துணை நிற்போனும் தெரிந்த பிசாசுகளே. இதில் எது நல்ல பிசாசு?

 • RAHIM A.S.S. wrote on 22 ஆகஸ்ட், 2017, 10:32

  Dhilip 2
  MIC என்னும் சாத்தானை விரட்டியடிக்கனும்  என்பது சரியாக படவில்லை மாறாக அழிக்க படவேண்டிய  சாத்தானாகும். 
  60 வருடமாக இந்தியர்களின் இரத்தத்தில் ருசி கண்ட பூனைபோல் திரியும் MIC சாத்தான்களை, எதிர்வரும் 14-வது பொதுத்தேர்தலில் இந்தியர்களே தங்களது பொன்னான வாக்கு என்ற அஸ்திவாரத்தை கொண்டு அழித்து விடவேண்டும்.   

 • தேனீ wrote on 22 ஆகஸ்ட், 2017, 20:30

  தமிழர்களுக்கென்று உருப்படியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே அரசியல் கட்சி ம.இ.க. தான். அந்த கட்சிக்குத்தான் நாடெங்கும் கிளைகள் உள்ளன. தமிழர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அரசாங்கத்தை நாட வேண்டுமானால் அந்த கட்சியை நம்பிதான் ஆற்றில் இறங்க வேண்டியுள்ளது. மற்ற தமிழர் சார்ந்த எந்த அரசியல் கட்சியும் தமிழருக்கு நேரிடையாக தொடர்பு இல்லாதவையாகும்.

  இருப்பதையும் இழந்து விட்டு மலேசிய அரசியலில் தமிழர் மூன்று நாமம் போட்டுக் கொள்ள வேண்டுமா?

 • TAPAH BALAJI wrote on 23 ஆகஸ்ட், 2017, 15:39

  தேனீ அவர்களே! உங்களின் மிக நேர்த்தியான சிந்தனையில் உதித்த கருத்துக்கு நான் தலைவணங்குகிறேன்! மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திவிடக்கூடாது என்பதில் நானும் தெளிவாக இருக்கிறேன் . இந்த நாட்டில் நம் சமூதாயம் முன்னேற ஒரு BLUE PRINT டோ, அல்லது பல்லான PRINT டோ,தேவையில்லை. ம.இ.கா வின் உயர்மட்ட தலைவர்களின் சிந்தனை மாறினால் போதும், நம் சமூதாயம் ஒரே வருடத்தில் நல்ல பொருளாதார முன்னேற்றத்தை காணலாம். அதற்கான வழிமுறைகள் பல உண்டு. ஆனால் ஏழை சொல் அம்பலம் ஏறாதே!

 • பெயரிலி wrote on 23 ஆகஸ்ட், 2017, 21:23

  இந்தியர்களை அவல நிலைக்கு ஆளாக்கிய ! வீடிழந்து ! வேலை இழந்து ! முகவரி இழந்து ! புறம்போக்கு வாதிகளாக்கிய ஒரு இனத்துரோகியிடம் கலந்தாலோசனை நடத்துகிறாயே நீ மானம் உள்ள தமிழன்தானா !! ஓட்டு சேகரிப்பது எப்படி ! இந்த தமிழனுக்கு என்ன தண்ணி வாங்கி ஊத்தினால் கவுக்கலாம் என்று ஆலோசனை நடத்தினாயா ! தமிழனின் அவலங்களை எப்படி போக்கு வது ! எப்படி இந்த தமிழனை முன்னேற்றுவது ! எதுவெல்லாம் பேச உனக்கு அறிவு கிடையாது ! உன்னுடைய நாடகமெல்லாம் ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்து விட்டது ! கிடைத்த காசை எடுத்துக்கொண்டு லண்டனுக்கு ஓடி விடு !! தடி எடுத்தவனெல்லாம் தண்டல் என்று அலம்பல் பண்ணி கொண்டிருக்காதே !!

 • s.maniam wrote on 4 செப்டம்பர், 2017, 15:27

  மேலே anonymous wrote on 23 august ,2017 என்ற கருத்தை எழுதியது S ..maniam என்ற நான் . பெயர் இடம்பெறாமல் போனதிற்கு வருந்துகிறேன் .

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: