புலிகளின் கப்பல்கலை அழிக்கும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய தமிழர் புதிய கடற்படைத் தளபதி

ltte enemy2007ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 10 கப்பல்களை அழித்தொழிப்பதற்குத் தலைமைதாங்கிய றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா என்ற தமிழர் தற்போது கடற்படைகளின் தளபதியாக அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார்.

இதனை அறியாத பல தமிழ் ஊடகங்கள். முதன் முறையாக தமிழர் ஒருவர், இலங்கை கடல் படை தளபதியாக பொறுப்பு ஏற்பதாகவும். அது பெருமை என்றும் பீத்துகிறார்கள் … என்ன உலகமடா சாமி ?

தற்போது கிழக்குப் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதியாகச் செயற்படும் றியர் அட்மிரல் சின்னையா, மகிந்த ராஜபக்ஷ காலத்தில், அரசியல் பழிவாங்கல் காரணமாக நாட்டைவிட்டுத் தப்பிச்சென்றிருந்தார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடு திரும்பிய அவர், கிழக்குப் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டு வருகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளில் இவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வரும் 22ஆம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-athirvu.com

TAGS: