‘நேர்மைக்கு அல்லாமல் இனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் ஹாடி’

harapanaபாஸ்   தலைவர்    அப்துல்   ஹாடி   ஆவாங்,   ஒரு  தலைவர்   நேர்மையானவராக   இருக்க    வேண்டும்    என்று   கூறாமல்  குறிப்பிட்ட   இனத்தைச்   சேர்ந்தவராகத்தான்   இருக்க   வேண்டும்    என்று   கூறுவதை    பக்கத்தான்   ஹராபான்   இளைஞர்    தலைவர்கள்   சாடினர்.

பாஸ்    தலைவர்     நேற்றைய    திறந்த    மடலிலும்   கடந்த    வாரம்  ஒரு    அறிக்கையிலும்    நாட்டை    வழிநடத்துவோர்   முஸ்லிம்களாகத்தான்   இருக்க   வேண்டும்    என்று    வலியுறுத்தி  இருந்தார்.

ஹாடியின்   கூற்றில்   இனவாதம்   மிளிர்வதாக   அமனா  இளைஞர்   துணைத்   தலைவர்   பயிஸ்  பாட்சில்,  டிஏபி  இளைஞர்    பிரிவுச்  செயலாளர்   ஹாவர்ட்   லீ,   பிகேஆர்   இளைஞர்   ஏற்பாட்டுக்குழுச்  செயலாளர்   அஹமட்   ஷுக்ரி   ரஸாப்,  பெர்சத்து    இளைஞர்    தகவல்   தலைவர்    உல்யா   அஹமா   ஹுசாமுடின்   ஆகியோர்   இன்று   வெளியிட்ட   ஒரு   கூட்டறிக்கையில்     தெரிவித்தனர்.

“ஒரு   நாட்டின்  நிலைத்தன்மையும்   வளப்பமும்   யார்  நாட்டை    ஆள்கிறார்கள்   என்பதைப்  பொறுத்ததல்ல;   நாடு  எப்படி    ஆளப்படுகிறது    என்பதைப்   பொறுத்துள்ளது.

“எனவே,  வலியுறுத்த   வேண்டியது   நேர்மையை,  நம்பகத்தன்மையை,  நல்ல   நிர்வாகத்தை,   ஊழலற்று  இருப்பதை,  வெளிப்படைத்தன்மையை”,   என்றவர்கள்  கூறினர்.