சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் எம்ஏசிசி அதிரடிச் சோதனை

Uniselஇன்று   மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்(எம்ஏசிசி)      சிலாங்கூர்  பல்கலைக்கழக(யுனிசெல்)த்தில்   அதிரடிச் சோதனை   ஒன்றை   நடத்தியது.

அங்கு   சோதனை   நடந்து  கொண்டிருந்த     வேளையில்    யுனிசெல்லுடன்   தொடர்புள்ள      மந்திரி  புசார்   இன்கொர்பரேடட்(எம்பிஐ),   ஜனா  நியாகா    சென்.  பெர்ஹாட்   ஆகியவற்றிலும்      சோதனைகள்     நடந்தன.

யுனிசெல்லுக்கும்   ஜனா  நியாகாவுக்குமிடையிலான    சச்சரவு   தொடர்பில்   சிலாங்கூர்  மந்திரி  புசார்   முகம்மட்   அஸ்மின்   அலிக்கும்    எம்பிஐ-க்கும்   எதிராக    புகார்   செய்யப்பட்டுள்ளதுதான்    எம்ஏசிசி-யின்   நடவடிக்கைக்குக்   காரணம்    என்று   நம்பப்படுகிறது.

யுனிசெல்லுடன்    செய்துகொண்ட   ஒப்பந்தப்படி   பணிகளை   முடித்துக்கொடுக்காத   நிலையிலும்   ஜனா   நியாகாவுக்குப்  பணம்  கொடுக்கப்பட்டிருக்கிறது   என்பதுதான்    குற்றச்சாட்டு.

ஆனால்,  எம்பிஐ,    நீதிமன்றம்   செய்துவைத்த   பஞ்சாயத்தின்படிதான்   பணம்   வழங்கப்பட்டதாகக்   கூறியது.

மேலும்,  பணம்  கொடுக்கப்பட்ட   விசயத்தில்     ஊழல்   நடந்திருப்பதாகக்  குற்றஞ்சாட்டுவோருக்கு    எதிராக   வழக்கு   தொடுக்கப்படும்   என்றும்  எம்பிஐ   எச்சரித்துள்ளது.