நூர் ஜஸ்லான்: பொகா வேறு ஐஎஸ்ஏ வேறு

isaகுற்றச்செயல்  தடுப்புச்   சட்டம்(பொகா)  கோடூரமானது    என்றும்    அதுவும் உள்நாட்டுப்  பாதுகாப்புச்   சட்டம்(ஐஎஸ்ஏ)   போன்றதுதான்   என்றும்  கூறப்படுவதில்    உண்மையில்லை    என   உள்துறை   துணை   அமைச்சர்   நூர்  ஜஸ்லான்   முகம்மட்    குறிப்பிட்டார்.

தடுப்புக்காவலில்  வைக்கப்படுவோருக்கு  ஐஎஸ்ஏ  வழங்குவதைக்  காட்டிலும்   பொகா   கூடுதல்   பாதுகாப்பு   உரிமைகளை   வழங்குவதாக   நூர்  ஜஸ்லான்    கூறினார்.

“முன்பு   ஐஎஸ்ஏ-இல்    அமைச்சருக்குத்தான்  முழு    அதிகாரம்.   அமைச்சர்  ஒரு  கையெழுத்து  போட்டால்   போதும்,,   ஒருவரை   60  நாள்களுக்குத்    தடுத்து   வைக்க  முடியும்.   எவரையும்   தடுத்துவைக்க   அமைச்சரே   உத்தரவு   பிறப்பிக்க   முடியும்.

“ஆனால்,  பொகாவில்  இரண்டு   முறைதான்   அதிகாரிகள்   தடுப்புக்காவலில்  வைக்க    அனுமதி  கோரி   விண்ணப்பித்துக்கொள்ள   முடியும்.  21வது   நாளிலும்  38வது   நாளிலும்”.  அமைச்சர்   டேவான்   நெகாரா(மேலவை)வில்   2017  குற்றச்செயல்   தடுப்புச்   சட்ட (திருத்தம்)   சட்டவரைவுமீதான   விவாதத்தை  முடித்து  வைத்துப்   பேசினார்.

அச்சட்டமுன்வரைவு   பின்னர்   ஏற்றுக்கொள்ளப்பட்டது.