தெரேசா கொக்: டிஏபி கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்

dapசெப்டம்பர்  10இல்  நடத்தத்   திட்டமிடப்பட்டிருந்த   கட்சி   மறுதேர்தல்    ஒத்திவைக்கப்படலாம்    என்று   கூறினார்   டிஏபி    உதவித்   தலைவர்    தெரேசா   கொக்.

தேர்தல்   தேதிக்கு   சங்கப்  பதிவக(ஆர்ஓஎஸ்) த்திலிருந்து    அதிகாரப்பூர்வ   ஒப்புதல்  கிடைத்த  பிறகுதான்   தேர்தலை   நடத்த   முடியும்.

நேற்று    ஆர்ஓஎஸ்   தலைமை   இயக்குனர்    முகம்மட்    ரஸின்   அப்துல்லாவைச்   சந்தித்துப்   பேசியபோது  “ஓரிரண்டு   நாள்களில்”   கடிதம்    வழங்கப்படும்   என்றார்.

“பேராளர்களுக்குக்  கடிதம்    அனுப்ப  போதுமான    அவகாசம்   தேவை.  தேர்தலை   செப்டம்பர்   10-இல்   நடத்தத்தான்   நாங்களும்  விரும்புகிறோம்.  அதற்கு   ஆர்ஓஎஸ்  கடிதம்    தேவை    அது,   இன்று   அல்லது     நாளை    வரலாம்.  இல்லையென்றால்  தேர்தல்    தேதியை   ஒத்திவைக்க   வேண்டிவரும்”,  என  தெரேசா  கொக்   இன்று   கோலாலும்பூரில்  கட்சித்   தலைமையகத்தில்    கூறினார்.

நேற்றைய   சந்திப்பில்     தேர்தலைக்  கண்காணிக்க    டிஏபி  ஏற்பாடு  செய்துள்ள  “சுதந்திர   அமைப்பை”   ஆர்ஓஎஸ்   ஏற்றுக்கொண்டது  என்றும்   கொக்   கூறினார்.

தேர்தலைக்   கண்காணிக்க   டிஏபி   ஆர்ஓஎஸ்-ஸுக்கும்  அழைப்பு   கொடுத்துள்ளது.