ஜாஹிட்: பெரும்பாலான பிஎன் கட்சிகள் வேட்பாளர் பட்டியலைக் கொடுத்து விட்டன

dpmஅம்னோ   உள்பட,    பெரும்பாலான  பிஎன்  கட்சிகள்   14ஆம்  பொதுத்   தேர்தலுக்கான   அவற்றின்   வேட்பாளர்   பட்டியலைச்   சமர்ப்பித்து    விட்டதாக  பிஎன்   துணைத்    தலைவரும்    துணைப்பிரதமருமான    அஹமட்   ஜாஹிட்  ஹமிடி   கூறினார்.

வேட்பாளர்களை   ஆய்ந்து   தேர்ந்தெடுக்க   அம்னோவும்   பிஎன்னும்   ஒரு   தனிக்  குழுவை   அமைத்திருப்பதாக    அவரை  மேற்கோள்காட்டி   த    ஸ்டார்   கூறியது.

எனினும்,  வேட்பாளர்கள்களைத்   தேர்ந்தெடுப்பதில்   இறுதி   முடிவு   செய்யப்போகின்றவர்   பிஎன்   தலைவர்   நஜிப்  அப்துல்   ரசாக்தான்.

“டத்தோஸ்ரீ  நஜிப்தான்   அதை   முடிவு  செய்வார்.

“இந்தத்   தடவை  களமிறங்கும்   அம்னோ   பெண்  வேட்பாளர்களின்   எண்ணிக்கை   கூடுதலாக    இருக்கும்”,,  எனவும்   துணைப்   பிரதமர்   ஸ்டாரிடம்   தெரிவித்தார்.