சிலாங்கூரில் பாஸ் 42 இடங்களில் போட்டியிடும்

pasஅடுத்த   பொதுத்   தேர்தலில்   சிலாங்கூரின்  56   சட்டமன்றத்   தொகுதிகளில்   42-இல்  பாஸ்    போட்டியிடும்     என   அற்ஃபிவிக்கப்பட்டுள்ளது.

பிகேஆர்  தலைவர்கள்   பாஸுடன்    தேர்தல்   உடன்பாடு    செய்துகொள்ள   முயன்று   வரும்     வேளையில்   இந்த   அறிவிப்பு    வந்துள்ளது.

“சிலாங்கூர்   பாஸ்     அடுத்த   பொதுத்   தேர்தலில்  பல்முனை   போட்டிக்குத்   தயாராக   உள்ளது.  பிஎன்   அல்லது  பக்கத்தான்    ஹராபானை   எதிர்த்து    எல்லா    இடங்களிலும்    போட்டியிடுவோம்”,  என   சிலாங்கூர்   பாஸ்   ஆணையர்   சாலேஹென்   முக்யி   இன்று   செய்தியாளர்    கூட்டமொன்றில்    கூறினார்.

கட்சி  திரட்டிய     தகவல்களை   அடிப்படையாகக்  கொண்டு     42  இடங்களில்   போட்டியிடுவது     என  முடிவு    செய்யப்பட்டுள்ளது   என்றாரவர்.

மார்ச்   மாதம்,  பாஸ்    தலைவர்   அப்துல்   ஹாடி     ஆவாங்,  அக்கட்சி   40   நாடாளுமன்ற    இடங்களை   வெற்றிகொள்வதுடன்   கிளந்தான்,    கெடா,  பேராக்,   திரெங்கானு,   சிலாங்கூர்   ஆகியவற்றையும்   கைப்பற்ற  இலக்குக்    கொண்டிருப்பதாகக்  கூறியிருந்தார்.

2013   பொதுத்   தேர்தலில்   பாஸ்   சிலாங்கூரில்   21   இடங்களில்   போட்டியிட்டு  15  இடங்களைப்   பெற்றது.

பிகேஆர்  வென்றது  14   இடங்களில்தான்.  ஆனாலும்   பாஸும்    மற்ற  பக்கத்தான்    ரக்யாட்   பங்காளிகளும்   மாநில   ஆட்சிப்   பொறுப்பை   பிகேஆரிடமே   ஒப்படைத்தன.