ஏஎம்கே கிளந்தானில் தலைவருக்கு எதிராகக் கிளர்ச்சி

amkகிளந்தான்   பிகேஆர்   இளைஞர்   பிரிவு   அங்காத்தான்   மூடா    கெஅடிலான் (ஏஎம்கே),  அதன்   தலைவர்   ஹாவிட்ஸ்   ரிஸால்   அம்ரான்,   பதவி   விலகக்  கோரிக்கை   விடுத்துள்ளது.

கிளந்தான்   ஏஎம்கே   உதவித்   தலைவர்  முகம்மட்  கைருல்   அமின்  அப்துல்   ரஹ்மான்,  இன்று   ஓர்     அறிக்கையில்,   ஹாவிட்ஸ்   “கிளந்தான்   ஏஎம்கே  தலைவர்களில்   பெரும்பான்மையினரின்   ஆதரவை   இழந்து   விட்டார்”   என்பதால்   பெரும்பான்மை   ஏஎம்கே   தொகுதிகள்  அவரைப்  பதவி  விலக  வலியுறுத்தும்   மகஜர்   ஒன்றைக்   கொண்டு   வந்திருப்பதாகாக்   கூறினார்.

“எனவே,   புதிய   மாநிலத்   தலைவரை   நியமிக்குமாறு    தேசிய  இளைஞர்   தலைவர்    நிக்   நஸ்மி   நிக்   அஹ்மட்டைக்   கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்,  கிளந்தான்   ஏஎம்கே,   கட்சித்   தலைவர்   டாக்டர்   வான்  அசிசா   வான்  இஸ்மாயிலுக்கு   முழு    அதரவைத்    தெரிவித்துக்கொள்கிறது.  கட்சியின்  மத்திய  தலைமை    என்ன   முடிவெடுத்தாலும்   ஏற்போம்.  மாநில  பிகேஆர்   தலைவர்   அப்  அசீஸ்   அப்  காடிருக்கும்  எங்களின்   உறுதியான    ஆதரவு   என்றென்றும்  உண்டு”,  என்று   அவ்வறிக்கை   கூறியது.

ஹாவிட்ஸை    வெளியேற்றுவதற்கு    எந்தக்    காரணமும்     அறிக்கையில்  குறிப்பிடப்படவில்லை     .  ஆனால்,  மலாய்   மெயில்    நாளேடு    ஹாவிட்ஸ்   கிளந்தான்   பாஸ்   அரசாங்கத்துடன்   நெருக்கமாக   இருப்பதுதான்   காரணம்   என்று   நம்புகிறது.