புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்த எனக்கு அச்சுறுத்தல்! கடற்படை தளபதி சின்னையா

chinnaiahவிடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்த காரணத்தினால், அவர்களின் அச்சுறுத்தல் தனக்கு இருப்பதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் தனக்கான அச்சுறுத்தல் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கடற்படை தளபதி இதனை கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ” நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என நான் நம்பவில்லை.

கடற்படையை மேலும், அதிக திறமை மற்றும் தொழிற்திறன் கொண்டதாக மாற்ற வேண்டும். அதுவே எனது இலக்கு.

அந்த வகையில், கடற்படை நிர்வாகத்திலும், அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதிப் பயன்பாடு குறித்தும் வெளிப்படைத்தன்மை பேணப்படும்” என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யுத்தத்தின் போது எத்தகைய சாதனைகளைச் செய்திருந்தாலும், சீருடையில் தவறு செய்த கடற்படையினர் தண்டிக்கப்படுவார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்த காரணத்தினால் அவர்களின் அச்சுறுத்தல் தனக்கு இருப்பதாகவும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் தனக்கான அச்சுறுத்தல் தொடர்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

-tamilwin.com

TAGS: