இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கருத்தரங்கு

uruththira_001காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் நிலையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையானது ஆகஸ்ட் 30ஆம் திகதியை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தன்று (ஆகஸ்ட் 30) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கனேடிய அரசானது இத்தகைய நாடுகள் மீது, அதிலும் குறிப்பாக இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் நடத்தப்படவுள்ளது.

குறித்த கருத்தரங்கு ஆகஸ்ட் 30ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Delta Hotel, 2036 Kennedy Rd ( Kennedy/401) எனும் இடத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் பல வல்லுனர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற தகவல் இன்றி அதற்கான பதிலை அரசிடமிருந்து எதிர்பார்த்து பல நூற்றுக்கணக்கான உறவுகள் மாதக்கணக்கில் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: