‘காலனித்துவக் காலத்தின் மறக்கப்பட்ட மலேசிய இந்தியர் வரலாறு’ நூல் வெளியீடும் கருத்துக்களமும்

banner - semparuthiமலேசிய சோசலிசக் கட்சி, நூசா ஜெயா கிளை ஏற்பாட்டில், ‘The Forgotten Malaysian Indian History in Colonial Era’ (காலனித்துவக் காலத்தின் மறக்கப்பட்ட மலேசிய இந்தியர் வரலாறு) எனும் வரலாற்று நூல் வெளியீடும் கருத்துக்களமும் கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது :-

நாள்   : ஆகஸ்ட் 26, 2017 (சனிக்கிழமை)

நேரம் : மாலை மணி 7.30

இடம் : ஜொகூர் தமிழர் சங்கப் பணிமனை (தாமான் நேசா, ஸ்கூடாய்)

No.19A, Jalan Ronggeng 19, Taman Manickavasagam, Skudai, Johor

சமூக, வரலாற்று ஆய்வாளர் மா.ஜானகிராமன் எழுதியுள்ள 318 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வு நூல், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அதிலுள்ள படங்களே நமக்கு நம் வரலாற்றைக் கூறிவிடும் அளவுக்குச் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது; படங்களின் வாயிலாக, காலனித்துவக் கால இந்தியர் வரலாற்றை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும், அன்றைய நிகழச்சியில், ‘சிந்திய இரத்தம், மறந்தது தேசம்’ எனும் கருப்பொருளுடன் ஒரு கருத்துக்களமும் நடைபெறவுள்ளதாகவும், எழுத்தாளர் ஜானகிராமனுடன், ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினர் தோழர் எஸ்.அருட்செல்வன் ஆகியோரும் கலந்துகொண்டு, தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவைச் சார்ந்த சா.திருமாறன் நம்மிடம் தெரிவித்தார்.

காலனித்துவக் காலத்தில் மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள், நாட்டின் சுதந்திரத்திற்கு book coverஅவர்கள் ஆற்றியப் பங்கு, சுதந்திரத்திற்குப் பின் சந்தித்த சவால்கள், அரசியல் பின்னடைவுகள், இன்றைய மலேசிய இந்தியர்களின் அரசியல் நிலை, அரசியல் தாக்கம், 14-வது பொதுத் தேர்தல் என பல்வேறு விஷயங்கள் அன்று விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில், கேள்வி-பதில் அங்கமும் இடம்பெறும் என்றும், பங்கேற்பாளர்கள் தங்கள் சந்தேகங்களைப் பேச்சாளர்களிடம் கேட்டு, தெளிவு பெற்றுக்கொள்ளலாம் என்றும் திருமாறன் தெரிவித்தார்.

ஹிண்ட்ராப் தேசியத் தலைவர் பொ.வேதமூர்த்தி, டாக்டர் மகாதீரைச் சந்தித்தப் பிறகு, கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது. மேலும், அண்மையில் அவர் , அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

பி.எஸ்.எம்.  அருட்செல்வன் , அண்மைய காலமாக டாக்டர் மகாதீர் – பக்காத்தான் உறவு , பி.எஸ்.எம் – பக்காத்தான் உறவு,  எதிர்வரும் பொதுத் தேர்தலில் பி.எஸ்.எம். நிலைப்பாடு என பலதரப்பட்ட தகவல்களையும்  கருத்துகளையும் பலரின் ஆதரவு, கண்டனம்  மற்றும் விவாதங்களுக்கு இடையே  தன் முகநூலில் பதிவிட்டு வருகிறார்.

ஆக, இவர்கள் இருவரையும் நேரிடையாக சந்தித்து, கருத்து பறிமாற பலர் ஆர்வம் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இலவச நிகழ்ச்சியில் சுற்றுவட்டார மக்கள், குறிப்பாக, சமூக-அரசியல்-வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென ஏற்பாட்டாளர்கள்  பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

மேலதிகத் தொடர்புக்கு :-  013 7586881 / 018 9884250