நஜிப்: பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம்

GEanytimeஎப்போது பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்விக்கு வழக்கம் போல் அடக்கமாகவே நஜிப் இருந்தார்.

தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம். தேவைப்பட்டால் இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் அம்னோ பேராளர் மாநாட்டையும் நாங்கள் தள்ளிவைப்போம் என்று நஜிப் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அம்னோ பேராளர் மாநாடு இந்த ஆண்டு டிசம்பர் 5 லிருந்து டிசம்பர் 9 வரையில் நடத்தப்படும் என்று நஜிப் இதற்கு முன்னதாக அறிவித்திருந்தார்.

14 ஆவது பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் நடத்தப்பட வேண்டும்.

நிலவும் பல ஊகங்களில் ஒன்று தற்போதைய நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் காலாவதி ஆகும் வரையில் நஜிப் காத்திருப்பார் என்பதாகும்.
இதனால், 2018 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை எதிர்வரும் அக்டோபரில் தாக்கல் செய்து அது அமலாக்கம் செய்வதற்கு தேவைப்படும் போதுமான நேரம் அவருக்கு கிடைக்கும்.