மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றி நாள் அனுஸ்டிப்பு

மாமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றி நாள் இன்று முல்லைத்தீவு கற்சிலை பிரதேசத்தில் சிறப்பாக நடை பெற்றுள்ளது.

வன்னிக்குறோஸ் கலாசார பேரவையின் தலைவரும் முத்தையன்கட்டு வலதுகரை வித்தியாலயத்தின் அதிபருமான சி.நாகேந்திரராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பண்டாரவன்னியன் அறங்காவற்கழகத்தின் போசகருமான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கலந்து சிறப்பித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் கிராம சேவையாளர்கள் பொது அமைப்புகள் பொது மக்கள் என பலர் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: