மக்கள் மனதில் என்றென்றும் ‘மக்கள் தொண்டன்’!


மக்கள் மனதில் என்றென்றும் ‘மக்கள் தொண்டன்’!

V David‘ஞாயிறு’ நக்கீரன் மக்கள் தொண்டாற்றிய தலைவர்கள், மக்கள் மனதினின்று என்றும் நீங்குவ தில்லை. அதற்கு சரியான சான்று ‘மக்கள் தொண்டன்’ டேவிட் என்றால் அதில் மிகையிராது. தொழிற்சங்கவாதியாக தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்ததால், மலேசிய அரசியலில் டேவிட் கடைசிவரை எதிரணியிலேயே மையம் கொண்டிருந்தார்.

அரசியல் எல்லையைக் கடந்து அனைத்துத் தொழிலாளர்களின் நலனுக்காக மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஓங்கி முழங்கிய டேவிட்டை, மலேசிய நாடாளுமன்றத்திற்கு இரு தவணைகளுக்கு தேர்ந்தெடுத்த பங்சார், டாமன்சாரா தொகுதி மக்கள் பாராட்டிற்குரியவர்கள்.

சிலாங்கூர் மாநில தொழிற்சங்கத்தின் அடிப்படை உறுப்பினராகவும் செயலாளராகவும் 1950-களில் செயல்பட்ட டேவிட், பின்னர் மலேசிய தொழிற் சங்கக் காங்கிரசில் பதினாறு ஆண்டுகள் பொதுச் செயலாளராகக் கடமையாற்றினார். அத்துடன் மலேசியப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளராகவும் ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணியாற்றினார். உலகப் போக்கு-வரத்து தொழிற்சங்க நிர்வாகக் குழு உறுப்பிராகவும் சேவை புரிந்த ‘மக்கள் தொண்டன்’, ஜெனிவா, சுவிட்சர்லாந்தில் நடைப்பெற்ற உலகத் தொழிலாளர் மாநாடுகளிலெல்லாம் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்டவர். இதனால் உள்நாட்டில் மட்டுமன்றி உலகத் தொழிற்சங்க மட்டத்திலும் ‘கிங் டேவிட்’ என்று அவர் அறியப்பட்டார்.

துறைமுக நகரான கோலக்கிள்ளானில், பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தை(WTI) நிறுவியதில் முக்கியப் பங்காற்றிய டேவிட், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுத்தவர்.

குறிப்பாக, இந்திய சமுதாயத்திற்காக அதனிலும் குறிப்பாக தமிழ்ச் சமுதாயத்திற்காக வாழ்நாளெல்லாம் தம் குரலை உயர்த்திய டேவிட், 1958-இல் அவசர காலச் சட்டத்தின் கீழும் 1964-இல் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்படியும் கைது செய்யப்பட்டார். அரசியல் பணிகளைக் கடந்து, இன-மொழி அடிப்படையிலும் செயலாற்றியவர் டேவிட். 1984-இல் உலகத் தமிழர் மாமன்றத்தைத் தோற்றுவித்து அதன் தலைவராகவும் பாடாற்றிய இவர், கடைசிவரை உண்மையான மக்கள் தொண்டனாகவே வாழ்ந்தார். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மலேசியவாழ் இந்தியர்களிடம், குறிப்பாக தமிழர்களிடம், இன்னும் குறிப்பாக தொழிலாளத் தோழர்களிடம் மிகுதியான செல்வாக்குடன் திகழந்த தொழிற்சங்கவாதியும் போரட்ட குணம் கொண்ட அரசியல்வாதியுமாகத் திகழ்ந்த ‘மக்கள் தொண்டன்’ டேவிட்டிற்கு கடந்த  ஆகஸ்ட் 26(1932) பிறந்த நாள்.

2005ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 10-ஆம் நாளில் தம் வாழ்க்கைப் பயணத்தை அவர் நிறைவு செய்தாலும் மலேசிய அரசியல் வரலாற்றில், அவரின் புகழும் பெருமையும் என்றும் நிலைத்திருக்கும்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • singam wrote on 27 ஆகஸ்ட், 2017, 21:13

  மக்கள் தொண்டன் என அழைக்கப்படும் டாக்டர் வி.டேவிட் மூன்றாம் முறையாக Operasi Lallang கில் 1987 கைது செய்யப்பட்டு, ஒன்றரை வருடங்கள் கமுன்டிங் சிறையில் இருந்தார். தற்போதைய எதிர்க்கட்சியினர் பெரும்பாலோர் சுயநலவாதிகள். டேவிட்டின் கால் தூசுக்கு ஒரு பயலும் நெருங்க முடியாது. 

 • en thaai thamizh wrote on 28 ஆகஸ்ட், 2017, 10:25

  ஐயா singam அவர்களே நீங்கள் கூறுவது உண்மை.

 • MOHAN mohan wrote on 2 செப்டம்பர், 2017, 21:50

  ஆமாம் பல முறை ஐயா அவர்கள் சிறைக்கு சென்ற நாள்தான் சமுதாயம் இதுவரை மதிக்கிறது .தனக்கென்று சொத்து சேர்க்காமல் எல்லாவற்றையும் தானம் தர்மம் செய்து விட்டு முடிந்தால் தமிழர்கள் இவர்போன்றவர்களை தூக்கி கொண்டு தலைவைத்து ஆடுவார்கள் .காமராஜர் இருக்கும்பொழுது ஒரு பைசா கூட இல்லையாம் ,அப்படி இருந்திருந்தால் அவரையும் சமுதாயம் மதித்து இருக்காது .காமராஜர் தனக்கென்று எதுவுமே சேர்க்காமல் போனதால்தான் தமிழ் நாட்டிலே ௯௦ சதவிகிதம் மக்கள் பிச்சை காரனுங்களா இருக்கானுங்க .இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் அடுத்தவரிடம் இருந்து புடிங்கி தின்னும் சமுதாயமாக இந்த தமிழ் சமுதாயம் இருக்க போகுதோ ???

 • s.maniam wrote on 5 செப்டம்பர், 2017, 18:09

  பெட்டாலிங் ஜெயாவில் ஒரு சாலைக்கு இவரின் பெயர் வைப்பதாக இருந்ததே என்னவாயிற்று !! பி .பி . நாராயணன் பெயரில் உண்டு !! இவருக்கு !! தகவல் தெரிந்தவர்கள் !!

 • abraham terah wrote on 6 செப்டம்பர், 2017, 11:15

  ஒரு தமிழரின் பெயரில் சாலையா? கனவு காண வேண்டாம்!

 • S.S.Rajulla wrote on 6 செப்டம்பர், 2017, 16:47

  பல தலைவர்கள் இருந்தார்கள்  – கட்சி தலைவர்கள் ,கழக தலைவர்கள் , இயக்க தலைவர்கள் இப்படி ஏராளம் பேர் இருந்தார்கள் ஆனால் மக்கள் தலைவனாக , மக்கள் தொண்டனாக வாழ்ந்தவர் இவர்தான் !! இருந்தவர்கள் பலர் – வாழ்ந்தவர்கள் சிலர் . அந்த சிலரில் உண்மையாக மக்கள் மனதில் வாழும் மாமனிதர் இவரைப்போல்  பார்ப்பது கடினம் ! 

 • s.maniam wrote on 6 செப்டம்பர், 2017, 17:42

  இது கனவல்ல நிஜம் ! நிறைவேற்ற பட வேண்டும் ! துன் சம்பந்தன் ! பி .பி .நாராயணன் ,என்று இருக்கும் போது ஏன் டேவிட் பெயரில் இருக்க கூடாது ! சிலாங்கூர் மாநிலத்தில் பண்டமாறனில் WIT யை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் டேவிட் அவர்கள் தானே ! பக்கத்தான் அரசாங்கம் அந்த தொழிற் பயிற்சி கல்லுரி இருக்கும் சாலைக்கு அவர் பெயர் வைக்கலாமே ! கிள்ளான் சந்தியாகு ! அண்டாலஸ் சேவியர் ! இவர்களுக்கெல்லாம் இதெல்லாம் கண் தெரியாதோ !

 • Dawamani wrote on 7 செப்டம்பர், 2017, 13:52

  பி பி நாராயணன் சாலைக்கு வி டேவிட்டின் பெயரை வைத்திருக்க வேண்டும்.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: