மகாதிர்: பெக்கானில் ‘திடீர் மக்கள்தொகை பெருக்கம்’ எப்படி வந்தது?

dr m பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து) அவைத்   தலைவர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்,   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்  தொகுதியான   பெக்கானில்   திடீரென்று   வாக்காளர்   எண்ணிக்கை   பெருக்கம்   கண்டது    எப்படி   என  மீண்டும்   கேள்வி  எழுப்பியுள்ளார்.

1999-இல்   மற்ற  இடங்களிலிருந்து   வாக்காளர்கள்   கொண்டுவரப்படாதிருந்தால்   நஜிப்  பெக்கானில்   தோற்றிருப்பார்   என்று  கூறிக்கொண்ட   மகாதிர்,  அப்படி  மறுபடியும்   நிகழலாம்   என்றார்.

“பெக்கானில்  35,000  வாக்காளர்கள்   இருந்தனர்.  அவர்  தோல்வி  கண்டிருப்பார்,  மற்ற  இடங்களிலிருந்து   வாக்காளர்கள்   கொண்டுவரப்படாதிருந்தால்.

“அடுத்தடுத்த   ஆண்டுகளில்    வாக்காளர்   எண்ணிக்கை   35,000-த்திலிருந்து  80,000  ஆக  உயர்ந்தது.  இத்தனை   வாக்காளர்கள்   எங்கிருந்து   வந்தார்கள்?

“இந்தக்   ‘கூடுதல்  எண்ணிக்கைதான்’  கவலையளிக்கிறது.  வரும்   தேர்தலில்   எண்ணிக்கை   மேலும்  கூடலாம்.  அஞ்சல்   வாக்கு   என்கிறபோது   அதை   மற்ற   இடங்களுக்கும்   கொண்டு  செல்ல  முடியும். அது  இல்லையென்றால்,  அவர்   தோற்பார்”,  என  மகாதிர்   நேற்றிரவு   கோம்பாக்கில்   கூறினார்.