கிளந்தான் பிகேஆர் இளைஞர் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்

hafidzகிளந்தான்  மாநில  பிகேஆர்    தலைமைத்துவத்தில்   நெருக்கடி   முற்றி  அதன்   இளைஞர்   தலைவர்   டாக்டர்   ஹாவிட்ஸ்   ரிசால்  அம்ரான்  பணிநீக்கம்   செய்யப்பட்டார்.

பிகேஆர்   தேசிய   இளைஞர்   தலைவர்   நிக்   நஸ்மி   நிக்   மாட்   மலேசியாகினியிடம்   இதை  உறுதிப்படுத்தினார்.

“அது  உண்மைதான்.  புதிய   தலைவர்   விரைவில்    அறிவிக்கப்படுவார்.  பிகேஆர்   தேசிய   நிலைத்   தலைவர்களும்  மாநிலத்    தலைவர்களும்   கூடிப்பேசிய  பின்னர்   எடுக்கப்பட்ட   முடிவு   இது”,  என்றவர்    வாட்ஸ்எப்  செய்தியொன்றில்   கூறினார்.

ஹாவிட்ஸைத்   தொடர்புகொண்டதற்கு   அவ்விவகாரம்   குறித்து   விரைவில்   செய்தியாளர்  கூட்டத்தை   நடத்தப்போவதாக   தெரிவித்தார்.

ஹாவிட்ஸ்,   பாஸ்  பிகேஆருடன்   உறவுகளை   முறைப்படி   முறித்துக்கொண்ட   பின்னரும்கூட   அதனுடன்   ஒத்துழைப்பது   அவசியமென்று   வலியுறுத்தி   வந்ததாகத்    தெரிகிறது.

அவரது   நிலைப்பாட்டால்  அதிருப்தியுற்ற    கிளந்தானின்  14  இளைஞர்    தொகுதிகளில்  எட்டுத்   தொகுதித்   தலைவர்கள்  ஹாவிஸைப்  பணிநீக்கம்  செய்யக்   கோரி   மத்திய  தலைமைக்கு   மகஜர்   ஒன்றை  அனுப்பினார்கள்.