தனபாலன் என் மகன் அல்ல, மலேசியாவின் மகன்: தாயார் பெருமிதம்

thanaகோலாலும்பூர்   சீ   விளையாட்டுப்  போட்டியில்   தங்கப்   பதக்கங்களில்    தாய்ப்  பதக்கம்   எனக்  கருதப்படும்   கால்பந்தாட்டப்   போட்டியின்   தங்கத்தை   வெல்லப்போவது   யார்   என்பது   இன்று  மலேசியாவுக்கும்  தாய்லாந்துக்குமிடையே    நடைபெறும்   இறுதி  ஆட்டத்தில்     தெரிய   வரும்.

சனிக்கிழமை  மலேசியாவுக்கும்   இந்தோனேசியாவுக்குமிடையிலான   அரை இறுதி   ஆட்டத்தைப்    பார்த்துக்கொண்டிருந்த   என். தனபாலனின்   தாயார்,   வி.திருசுந்தரி, 52,   இந்தோனேசியா    மலேசியாவின்   தற்காப்பு    அரணைத்   தாக்கியபோதெல்லாம்    நெஞ்சம்  பதறினார்.

“மலேசியா  கோல்   அடித்தபோது   அதை   என்  மகன்தான்   அடித்தான்   என்பது  அப்போது   எனக்குத்   தெரியாது.    ‘தனபாலன் -தனபாலன்’   என்று   அரங்கம்   முழுக்க   முழக்கமிட்டபோதுதான்  அதை   உணர்ந்தேன்.

“அவன்   எனக்கு  மகன்  அல்ல.    மலேசியாவின்  மகன்.  அந்த  கோல்  அவனது  முயற்சி   மட்டுமல்ல. மலேசியக்  குழுவின்  ஒட்டுமொத்த   ஒத்துழைப்பும்    அதற்குக்  காரணமாகும்”,  என   அத்தாய்   நேற்று   பெர்னாமாவிடம்   பெருமையாகக்    கூறினார்.

தனபாலன்  கால்பந்தாட்ட    வீரராவதற்கு   அவரின்   தந்தை    எஸ். நடராஜா   முக்கிய   காரணமாவார்.  தனபாலனிடமுள்ள   கால்பந்தாட்ட   ஈடுபாட்டை   அறிந்து   சிறு  வயது  முதலே   அவருக்குப்  பயிற்சி   அளித்தும்  பாராட்டியும்   ஊக்குவித்து   வந்துள்ளார்.