எம்ஏசிசி ஓப்ஸ் கோபி நடவடிக்கையைக் கைவிடவில்லை

paulமலேசிய    ஊழல்தடுப்பு    ஆணயம்(எம்ஏசிசி)     இரண்டு   போலீஸ்   மாவட்டத்   தலைவர்கள்   சம்பந்தப்பட்ட    ஓப்ஸ்   கோபி   வழக்கை   மூடிவிட்டதாகக்  கூறப்படுவதை   புத்ரா  ஜெயா   மறுத்தது.

“(எம்ஏசிசி)  எந்த   நடவடிக்கையும்   எடுக்கவில்லை    என்று   கூறப்படுவது   உண்மையல்ல,  எம்ஏசிசி    அவ்வழக்கைக்  கைவிட்டுவிடவில்லை”,  எனப்  பிரதமர்துறை   அமைச்சர்    பால்  லவ்    கூறினார்.

அது,   ஜாசின்,  மலாக்கா    தெங்கா   ஆகிய    இரண்டு   போலீஸ்   மாவட்டங்களின்    தலைவர்களும்   சில   அதிகாரிகளும்  சம்பந்தப்பட்ட    வழக்கு   என்றாரவர்.

நாடாளுமன்றத்தில்  ஓப்ஸ்  கோபி-இன்கீழ்   கைதான  12  போலீஸ்   அதிகாரிகளின்  நிலை  குறித்து   தெரிந்துகொள்ள  விரும்பிய   பூச்சோங்   டிஏபி   எம்பி  கோபிந்த்   சிங்   டியோவுக்குப்   பதிலளித்த    லவ்,   விசாரணை   இன்னும்   நடப்பதாக    தெரிவித்தார்.

அப்போலீஸ்   அதிகாரிகள்   கடந்த   மே   மாதம்  கைதானார்கள்.

போலீஸ்    அதிகாரிகள்    கையூட்டுப்   பெற்றுக்கொண்டு   சூதாட்ட   நடவடிக்கைகளுக்கும்   ஏனைய   குற்றச்செயல்களுக்கும்  பாதுகாப்பு   அளிப்பதாக   புகார்கள்   வந்ததை   அடுத்து   எம்ஏசிசி  ஓப்ஸ்  நடவடிக்கையைத்   தொடங்கியது.

அந்நடவடிக்கையில்  12  பேர்,  பெரும்பாலும்   போலீஸ்   அதிகாரிகள்  கைது  செய்யப்பட்டனர்.

ஜூலையில்   பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கின்   உத்தரவின்படி    ஒப்ஸ்  கோபி   நடவடிக்கை   நிறுத்தப்பட்டதாக   அதிரடித்  தகவல்களை   அம்பலப்படுத்தும்     சரவாக்   ரிப்போர்ட்    கூறியது.  ஆனால்,  எம்ஏசிசி   அதை   மறுத்தது.