குலா: போலீஸ் நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டிருந்தவர் எப்படி தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார்?


குலா: போலீஸ் நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டிருந்தவர் எப்படி தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார்?

 

Kulaஜெலெப்பாங் போலீஸ் நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டிருந்த நிலையில் தனக்குத் தானாகவே தீயிட்டுக் கொண்டதாக கூறப்பட்ட பாஸ்கர் ராவ், 47, நேற்று பின்னேரம் மணி 4.10 மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் கடந்த 9 நாள்களாக மருத்துவமனையில் தனது உயிருக்காகப் போராடினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் போலீஸ் காவலில் இருந்த பாஸ்கர் ராவ் தமக்குத் தாமே தீயிட்டு பலியாகியிருக்கிறார். இதற்கான “உண்மையான மற்றும் நேர்மையான பதில் தேவைப்படுகிறது” என்று கூறிய குலா, இதில் முக்கியமான தரப்பாக போலீஸ் இருப்பதால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இது எப்படி நடந்தது என்று போலீஸ் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இச்சம்பவம் பற்றிய விசாரணையின் முடிவில் போஸீசுக்கு அக்கறை இருப்பதால், விசாரணையை போலீசாரிடமே விட்டுவிட முடியாது ஏன்னென்றால் அங்கு பாரபட்சத்திற்கு இடமுண்டு.

ஆகவே, இச்சம்பவம் ஏன் மற்றும் எப்படி நடந்தது என்பது குறித்த விசாரணையை இஎஐசி (அமலாக்க ஏஜென்சி நேர்மை ஆணையம்) அல்லது சுஹாகாம் அல்லது இரண்டு அமைப்புகளே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குலா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

போலீஸ் நடுநிலைமையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறிய குலா, “சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை, அதில் போலீசும் அடங்கும்”, என்றும் அறிவுறுத்தினார்.

இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ வி. விமல் அரசன். என். செல்வம் மற்றும் குலா ஆகியோர் அடங்கிய குழு தேவையான சட்ட உதவிகளை வழங்கும் என்று குலா மேலும் கூறினார்.

 

 

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • en thaai thamizh wrote on 30 ஆகஸ்ட், 2017, 19:29

  எல்லா காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு படம் பிடிக்கும் சாதனம் பொருத்தப்பட வேண்டும்.அம்னோ குண்டர்களுக்கு நம்மவர் என்றால் கிள்ளுக்கீரை. இங்குள்ள மனித உரிமை -பேருக்குத்தான்.

 • தேனீ wrote on 30 ஆகஸ்ட், 2017, 20:47

  தருதலைகள் இருந்தால் என்ன போனால் என்ன? உதவி தேவைப்படும் மக்களுக்காக உழையுங்கள்.

  வெற்று விளம்பரத்தைத் தேடி அரசியல் நடத்த வேண்டாம்.

 • TAPAH BALAJI wrote on 31 ஆகஸ்ட், 2017, 10:11

  தேனீ அவர்களுக்கு நன்றி. எதிர்க்கட்சிகளின் சித்துவேலைகளை நன்கு தெரிந்துவைத்துளீர்கள் !

 • en thaai thamizh wrote on 31 ஆகஸ்ட், 2017, 11:29

  தேனீ அவர்களுக்கு- தறுதலைகள் என்று யாரை கூறுகிறீர்கள்? நம்பிக்கை நாயகன் அத்தான் தூயா நாஜிபு யார்?

 • abraham terah wrote on 31 ஆகஸ்ட், 2017, 14:03

  தவறு நண்பர்களே! அவர் தவறான நபராக இருக்கலாம்; நாளை நல்ல ஒரு மனிதருக்கும் இப்படி நடக்க வாய்ப்புண்டு. நீதி நிலைப்படுத்த வேண்டும். அது தான் முக்கியம்.

 • தேனீ wrote on 31 ஆகஸ்ட், 2017, 20:23

  இறந்தவர் பின்புலம் அறிந்துதான் பேசுகின்றேன். நடந்தது என்னவென்றும் அறிந்துதான் பேசுகின்றேன். இறந்தவரின் மனைவி காவல்துறைக்கு எதிராகப் புகார் கொடுத்தாரா?

 • TAPAH BALAJI wrote on 31 ஆகஸ்ட், 2017, 22:50

  தேனீ வருத்தப்படவேண்டாம் ! ஸிரோவாகிய குகனை ஹீரோவாக்கிய பெருமை நமது எதிர்க்கட்சிக்கு உண்டு!! இவர்களுக்கு நமது சமூகம் உணர்ச்சிகள் அடிப்படையில்தான் இயங்குவார்கள் என்று நன்கு தெரிந்து கொண்டு தங்களின் மலிவான பழைய தேர்தல் யுக்திகளை கையில் எடுத்துவிட்டார்கள். இனி அவர்கள் அடங்கமாட்டார்கள்.

 • நம்மவன் wrote on 1 செப்டம்பர், 2017, 11:42

  தேனீ,TAPAH BALAJI …பாஸ்கர் ராவ் மற்றும் குகன் இருவரும் ஆயிரம்தான் கெட்டவர்களாக இருக்கட்டும், அவர்களை உயிரை பறிப்பது ஒன்று மட்டும் தான் தீர்வா? உங்கள் கூற்றுப்படி அது ஒன்றே தீர்வாக ஏற்றுகொள்லப்பட்டாலும் அவர்கள் இருவரும் இறந்து விட்டதால் இனி எல்லாம் தூய்மையாகிவிடுமா? இனி நாட்டில் எல்லாம் நல்லவையாகவே நடக்குமா? கெட்டவர்கள் எல்லோரும் இப்படி துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்றால் நீங்கள் இருவர் மற்றும் உங்களைச் சார்ந்தோர் சிலரும் மட்டுமே இந்த உலகத்தில் இருக்க முடியும். காரணம் மற்ற எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தீமை செய்தவர்களாகவே இருப்பார்கள் என்பது எனது கருத்து.

 • ஜி. மோகன்- கிள்ளான் wrote on 1 செப்டம்பர், 2017, 12:01

  தேர்தல் நெருங்கும் வேளையில் இது போன்ற மேடை நடங்கள் மிக பெரியதாக மேடை ஏறும். இதில் கொஞ்சம் திறமையானவர் குலா அவர்கள். நிறைய சேவைகள் மக்களுக்கு செய்து உள்ளார் இல்லை என்று மறுப்பு இல்லை. பிறகு என்ன என்று கேட்கலாம். தேர்தல் சமயத்தில் அதிகமாக உங்களின் படங்கள் பத்திரிகையில் அதிகமாக வந்தன இப்போ காணவில்லை. அதே போன்று ஒரு சில மா.இ.கா தலைவர்களும் இருக்கின்றனர். எங்கேயா இருக்கின்றிர்கள். உங்களின் சேவைகள் நமக்கு இப்போ அதிகமாக தேவையாக உள்ளன. அரிசி மாவு உப்பு தேர்தல் சமயத்தில் உங்கள் முகத்தை காண்பிக்க கொடுகிறிர்கள் தேவையா அது. அதை விட இப்போ செய்தல் நீங்கள் ஒரு இரோவாக மக்கள் மனதில் இருப்பிர்கள் தானே. இறந்தவரின் மனைவி எங்கே. திரு. குலா விளக்கம் கொடுக்கலாமே. அரசியல் வேஷம் வேண்டாம் மக்கள் ரொம்பவும் விழித்து கொண்டு உள்ளனர். எங்கள் பகுதியில் இருக்கின்ற இந்திய தலைவர்கள் யார் என்று எங்களுக்கே தெரியது. அப்படியே அந்த தலைவரை அணுகினால் மிகவும் சிரமம். அனால் பத்திரிகையில் பார்க்கலாம் அவர்களின் பேச்சு. ஒரு நல்ல சேவை செய்ய கூடிய தலைவர் வர வேண்டும் வரும் தேர்தலில்.

 • jamboji wrote on 3 செப்டம்பர், 2017, 15:53

  தீப்பெட்டி மலேஷியா நாட்டிலே தானே பறந்து வரும் அப்புறம் பெட்ரோல் சுயமாக பும்மிலிருந்து பறந்து வரும் மலேஷியா POLISE க்கு ஒன்றுமே தெரியாது பாட்சியில் பால் குடிக்கும் பிள்ளைகள் மலேஷியா போலீஸ் அது தெரியாது உங்களுக்கு mR KULA tHE LAUGH AT MALAYSIA

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: