ரஃபிஸி கண்டிக்கப்பட்டார் என்று செய்தியில் உண்மை இல்லை

 

rafiziகட்சிக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டதற்காக பிகேஆரின் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி கண்டிக்கப்பட்டார் என்ற செய்தி அறிக்கைகளில் உண்மை இல்லை என்று பிகேஆர் கூறுகிறது.

தகவல்களைப் பெறுவதற்கு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமான வட்டாரங்களை நாட வேண்டும் என்று பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசூதியன் கேட்டுக்கொண்டார்.

கடந்த அரசியல் குழுவின் கூட்டத்தில் கட்டொழுங்கு பற்றிய எதுவும் எழுப்பப்படவில்லை என்று கூறிய அவர், நாங்கள் ஒருவருக்குக்கொருவர் மோதிக்கொள்வதை விரும்பும் செய்தியாளர்கள் பரப்பும் வதந்திகளால் கவரப்பட்டு விடாதீர்கள் என்று அவர் மேலும் கூறினார்.

சின் சியு டெய்லியின் செய்திப்படி, கட்சியின் அரசியல் பிரிவு ரஃபிஸிக்கு “கடுமையான வாய்மொழி எச்சரிக்கை” கொடுக்க வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.

அச்செய்தின்படி, ரஃபிசி தொடர்ந்து “சத்தம் போட்டுக்கொண்டிருந்தால்” கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 29 இல் நடைபெற்ற கட்சியின் அரசியல் பிரிவின் கூட்டத்தில் ரஃபிஸி கலந்துகொள்ளவில்லை என்ற உண்மை அச்செய்தில் வெளியிடப்படவில்லை என்று சைபுடின் மேலும் கூறினார்.