‘பாஸ் ஹராபானுடன் ஒத்துழைக்கும் என்று கனவு காண்பது போதும்’

harapanaஉங்கள்   கருத்து:  மும்முனைப்  போட்டி   தவிர்க்க   முடியாதது   என்றால்  ஹராபான்   அதற்கு   ஆயத்தமாக     வேண்டியதுதான்

மும்முனைப்  போட்டி  பிஎன்னுக்கு  மூன்றில்  இரண்டு  பங்கு   பெரும்பான்மை   கிடைக்க   வழிகோலும்   என  அம்பிகா   அச்சம்

லெஜிட்:  தேசிய   மனித  உரிமைக்  கழக(ஹகாம்)  தலைவர்   அம்பிகா   ஸ்ரீநிவாசன்,   எதிர்வரும்   பொதுத்  தேர்தலில்   மும்முனைப்   போட்டி    நிலவுமானால்   அது    பிஎன்னுக்கு     மூன்றில்   இரண்டு   பங்கு    பெரும்பான்மை  எளிதாகக்   கிடைக்க     வழிவகுத்துவிடும்   என   அச்சம்   கொள்கிறார்.

எனவே,   ஆபத்தை   எதிர்கொள்ள   வேண்டாம்   என்று    எச்சரித்து   பாஸுடன்  தொடர்ந்து    பேச்சுகள்   நடத்துங்கள்  என்று  பக்கத்தான்    ஹராபானுக்கு   ஆலோசனை   கூறுகிறார்.

என்னைக்  கேட்டால்  பக்கத்தான்    ஹராபான்,     பாஸ்  இன்றி  தனித்து   முன்னே   செல்ல    வேண்டிய   தருணம்   வந்துவிட்டது    என்பேன்.   அடுத்த   திருப்பத்தில்    பொதுத்   தேர்தல் .   மும்முனைப்   போட்டி   குறித்து  கவலைப்பட   இது   நேரமல்ல. ஹராபான்   அதன்   ஆற்றல்   அனைத்தையும்   பாஸ்   இன்றித்   தனியே   போராடுவதற்காகவே   செலவிட    வேண்டும்.

பிகேஆரும்  பறப்பதைப்  பற்றிக்   கவலைப்பட்டுக்  கொண்டிருக்காமல்   இருப்பதில்   கவனம்   செலுத்த    வேண்டும்.  அப்படியே   பாஸ்,  ஹராபானுடன்   ஒத்துழைக்க  முடிவு   செய்கிறது    என்று  வைத்துக்கொண்டு    ஹராபான்  கூட்டரசு   அரசாங்கத்தை   அமைக்கிறது   என்று  வைத்துக்கொள்வோம்.  பாஸ்   என்ன    செய்யும்?  அது  கட்சிமாறி   அம்னோவுடன்    சேர்ந்து    அரசாங்கத்தை  மாற்றி  அமைக்க  முயலும்.

பல   தடவை    அவர்கள்    தங்கள்   குணத்தைக்   காட்டியுள்ளனர்.  இன்னுமா    அம்பிகாவும்    சிலாங்கூர்   மந்திரி   புசார்   அஸ்மின்  அலியும்   பாடம்  கற்றுக்கொள்ளவில்லை.

எல்லா  இடத்திலேயும்  மாற்றம்     தெரிகிறதே.  ஹராபான்  ஒன்றுபட்டுச்   செய்ய  வேண்டியதைச்  செய்து   முடிக்க    நேரம்    வந்து   விட்டது.

மலாக்காகாரன்: அதைத்   தாண்டி   வர   வேண்டும்.   மும்முனைப்    போட்டி    தவிர்க்க   முடியாதது.  பாஸ்   தலைமை   அதைப்   பற்றிக்  அக்வலைப்படவில்லை .  அதனால்.  விட்டு  விடுங்கள்.   அவர்கள்  மனம்   மாற   மாட்டார்கள்.  அம்னோ   தங்களை   உயர்வாக    மதிப்பிடுவதாகவும்     ஹராபானைவிட     தாங்கள்  மேலானவர்கள்   என்றும்    திமிரான   நினைப்பு   அவர்களுக்கு.

பாஸ்   வேண்டாம்    என்று   யாரும்   சொல்லவில்லை.   ஆனால்,  அவர்களுக்குத்தான்   அதில்   விருப்பமில்லையே.   மேலும்,  பாஸ்    தலைவர்கள்    சுயநலமிகள்.

பாஸ்   அம்னோவுக்கு   எதிராக    அணியில்   சேர்ந்தாலும்,  அவர்களை   நம்ப    முடியாது.    எந்த  ஒப்பந்தத்தாலும்    அவர்களைக்   கட்டிப்போட   முடியாது.

ஜெரால்ட்  லூர்துசாமி:  பேச்சு  பேச்சு   நடத்து    என்றால்   எதுவரை   பேச்சு   நடத்துவது?   பார்த்துக்கொண்டே    இருங்கள்,    ஜிஇ14  முடிவுகள்   வந்ததும்  அம்னோவும்   பாஸும்   உடன்பாடு   செய்துகொள்ளும்.  அதுவரை   பாஸ்  அம்னோவையும்  பிஎன்னையும்   எதிர்த்துப்   போராடுவதுபோல்   காட்டிக்கொள்ளும்.

முடிவில்,  கோட்பாடுகளைமீறி   இனத்துக்கும்   சமயத்துக்கும்தான்   வெற்றி.   பாஸ்   விரும்பும்   எதையும்   ஹராபானால்   கொடுக்க   இயலாது.  அம்னோவால்   ஹுடுட்டைக்  கொடுக்க   முடியும்,  முஸ்லிகளுக்கு   ஒரு   சட்டம்   முஸ்லிம்- அல்லாதாருக்கு   ஒரு   சட்டம்   என  ஷியாரியா    சட்டத்தை   மேலும்   வலுப்படுத்த  முடியும்.  அப்படி  இருக்கும்போது   டிஏபியையும்   அமனாவையும்   எதிரிகளாக   நினைக்கும்   பாஸுக்கு   ஹராபான்    எதைக்   கொடுக்க   முடியும்?

மும்முனைப்   போட்டியைத்   தவிர்க்க   இயலாது    என்றால்   அப்படியே   நடக்கட்டும்.  ஹராபான்   தேர்தல்  வேலைகளை    முடுக்கி   விட    வேண்டும்.  பாஸ்   முடிவு  செய்வதற்காகக்   கடைசி  நேரம்வரை   காத்திருக்கக்  கூடாது.  சுங்கை   புசார்,  கோலா   கங்சார்   இடைத்   தேர்தல்களை   மறந்து   விடக்  கூடாது.