கேவியஸ் கேமரன்மலையில் போட்டியிடுவேன் என்கிறார்

 

Kaviusஎதிர்வரும் 14 ஆவது பொதுத்தேர்தலில் மைபிபிபி கட்சி தலைவர் எம். கேவியஸ் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறுகிறார்.

“நான் போட்டியிடப் போகிறேன் (ஏனென்றால்) நான் கேமரன்மலையைத் தவிர வேறு எங்கும் போகப் போவதில்லை. எந்த டிக்கெட்டில் என்று எனக்குத் தெரியாது…பாரிசான் நேசனல் (பிஎன்) எனக்கு டிக்கெட் கொடுக்கவில்லை என்றால், நான் எனது சொந்த டிக்கெட்டில் போட்டியிடுவேன்”, என்று கேவியஸ் மலாக்காவில் 17வது மலாக்கா மைபிபிபியின் மாநாடு தொடங்கி வைக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அம்மாநாட்டை மலாக்கா முதலமைச்சர் இட்ரீஸ் ஹருன் தொடங்கி வைத்தார். மைபிபிபியின் உதவித் தலைவர் எம். காந்தியும் மாநில மைபிபிபி தலைவர் சியு தியாங் சாய்யும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

போகுவரத்து அமைச்சின் ஆலோசகருமான கேவியஸ், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கேமரன்மலை மக்களுக்கு அவரது சேவையைத் தொடங்குவதற்கு முன்னர், பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் “அனுமதி”யைக் கேட்டிருந்ததாக கூறினார்.

முன்னதாக, இத்தொகுதியில் மஇகா போட்டியிடும் என்று அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் வலியுறுத்தியாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.