பொதுத் தேர்தலில் நஜிப்பை எதிர்க்கும் பெரும்பொறுப்பு பிகேஆருக்கு

pekanபக்கத்தான்   ஹராபான்  தலைமை,   14வது  பொதுத்  தேர்தலில்    அதன்  பங்காளிக்  கட்சிகளில்    யாருக்கு   என்ன   பொறுப்பு   என்பதைப்   பகிர்ந்து   கொடுத்திருக்கிறது. அதில்  பிகேஆரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ள    பொறுப்புத்தான்   கடினமானது.   பிகேஆர்,   பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்கின்  பலம்வாய்ந்த   கோட்டையாக   திகழும்    பகாங்கைத்  தகர்க்க   வேண்டும்.

பகாங்கில்   பெல்டா  குடியிருப்புகளைக்  கொண்ட   தொகுதிகள்   அதிகம். அங்கெல்லாம்    எப்போதுமே   அம்னோவின்   ஆதிக்கம்தான்.   எனவே,  அம்னோவிலிருந்து   பிரிந்து    வந்த    பார்டி     பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)  அங்கு   போட்டியிடுவதுதான்  சரியாக   இருக்கும்  என்றுதான்   யாரும்   நினைப்பார்கள்.

ஆனால்,  பெர்சத்துவுக்கு   அதில்    அவ்வளவு   ஆர்வமில்லை   என  ஹராபான்   வட்டாரமொன்று   மலேசியாகினியிடம்   தெரிவித்தது.

சுயேச்சை   ஆய்வுக்கழகமான   இல்ஹாம்   மையம்,   பெர்சத்துவுக்கு   பகாங்கின்   பெல்டா   பகுதிகளில்   செல்வாக்கு  இல்லை    என்றும்    அது   எழுப்பும்    விவகாரங்கள்   பெல்டா   குடியிருப்பாளர்களிடம்   எடுபடுவதில்லை     என்றும்    கூறுகிறது.

அதனால்தான்  அப்பொறுப்பு   பிகேஆரிடம்   வந்துள்ளது    என்று   கூறிய   ஹராபான்    வட்டாரம்,  இந்திரா   கோட்டா   எம்பி   பவுசி   அப்துல்   ரஹ்மான்  என்னும்  மூத்த    அரசியல்வாதி   பிகேஆரிடம்   இருப்பதும்   மற்றொரு    காரணம்     என்றது.

பகாங்கை   ஹராபான்  கைப்பற்றுவது    எளிதான     செயலல்ல.  நஜிப்  பெல்டா  மற்றும்     கிராமப்புற   மலாய்க்காரர்  ஆதரவை     உறுதிப்படுத்திக்கொள்ளும்   முயற்சிகளை   முடுக்கி  விட்டிருக்கிறார்.

ஹராபான்   வெற்றிபெறாவிட்டாலும்   பலத்த   சேதத்தை   உண்டுபண்ண   முடியும்   என்று   நம்புகிறார்   பவுசி.

“மாநிலச்   சட்டமன்றத்தில்   மூன்றில்  இரண்டு   பங்கு   பெரும்பான்மை   கிடைப்பதைத்   தடுக்கலாமே”,  என்றவர்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.