அரிசி, நன்கொடை போன்றவையும் கையூட்டுத்தான்: எம்ஏசிசிக்கு மரியா சின் பதிலடி

bersihஅரிசி  இனாமாகக்  கொடுப்பது   கையூட்டு   ஆகாது   என்று  மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)   அதிகாரி   ஒருவர்   கூறியிருப்பதை  மறுக்கிறார்   பெர்சே   தலைவர்   மரியா   சின்.

“அதை   நான்  ஒப்புக்கொள்ள  மாட்டேன்.  அதுவும்  வாக்குகளை   விலைக்கு   வாங்குவது   போன்றதுதான்”.  எம்ஏசிசி   துணைத்  தலைவர்     அஸாம்  பாக்கியின்   கூற்று  குறித்துக்  கருத்துரைக்கும்படி     கேட்டுக்கொண்டதற்கு மரியா  இவ்வாறு   கூறினார்.

அஸாம்   நேற்று,    ஏழைகளுக்கு  அரிசி  கொடுப்பது   நன்கொடை   அளிப்பது   போன்ற  “உண்மையான    உதவிகள்”   கையூட்டு   அல்ல   என்றும்    அதேபோல்   தேர்தல்   வாக்குறுதிகளும்  கையூட்டு   அல்லவென்றும்   தேர்தல்  காலங்களில்   அப்படி    வாக்குறுதி  அளிப்பது   சகஜம்தான்   என்றும்   கூறியதாக     அறிவிக்கப்பட்டிருந்தது.

“வாக்குறுதிகளை(தேர்தல்  காலத்தில்)   நிறுத்த   வேண்டும்.  (நாடாளுமன்றம்  கலைக்கப்பட்ட  பிறகு)  நீங்கள்   அரசாங்கம்   அல்ல.  பிறகு   எப்படி    வாக்குறுதி   அளிக்கிறார்கள்?  அதையும்   தேர்தல்   பிரச்சாரங்களில்    ஏன்   செய்கிறீர்கள்”,  என  மரியா  வினவினார்.

தேர்தல்   காலத்தில்தான்   சமுக   நலத்  திட்டங்கள்   மேற்கொள்ளப்படுகின்றன   என்பதை  அவர்   சுட்டிக்காட்டினார்.

“தேர்தல்  காலத்தில்   அரசாங்கம்   செயல்படாது. (அரசாங்க    அலுவல்களை  அப்போது)  பராமரிப்பு   அரசுதான்   செய்ய    வேண்டும்.   ஆனால்,  அப்படி   ஒன்று   நம்மிடம்   இல்லை.

“நிர்வாகத்தைக்  கவனித்துக்கொள்ள   நமக்குப்   பராமரிப்பு   அரசாங்கம்  ஒன்று   தேவை”,  என்றாரவர்.