கிட் சியாங்: மும்முனைப் போட்டியை ஹரப்பான் எதிர்கொள்ள வேண்டும்

 

Kitrealityபாஸ் மற்றும் பின் ஆகியவற்றுக்கு எதிராக மும்முனைப் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய எதார்த்தத்தை பக்கத்தான் ஹரப்பான் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.

14வது பொதுத்தேர்தலில் மும்முனைப் போட்டி, அதில் பாஸ் கட்சியும் இடம்பெறும், இருக்கும் என்ற அரசியல் எதார்த்தத்தை ஹரப்பான் கட்சிகளும் தலைவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்நிலை சிலாங்கூல்கூட ஏற்படும் என்றாரவர்.

இந்த அரசியல் எதார்த்த நிலையை உடனடியாக ஏற்றுக்கொண்டால், அம்னோ/பின் கூட்டணியை, மும்முனைப் போட்டியில் கூட, ஹரப்பான் தோற்கடித்து புத்ரா ஜெயாவையும் ஜோகூர் மாநில அரசையும் கைப்பற்றும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்று அவர் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

நமக்கு நேரம் தேவைப்படுகிறது. பல இலட்சக்கணக்கான அம்னோ மற்றும் பாஸ் உறுப்பினர்களுக்கு ஏன் நஜிப்பும் ஹாடியும் ஏற்றுக்கொள்ளத்தகாதத் தலைவர்கள் என்பதை விளக்கி தெளிவுபடுத்த வேண்டும்.

நாட்டில் நிலவும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் மும்முனைப் போட்டி பிஎன்னுக்கு சாதகமாக இருக்கும் என்பது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கிட் சியாங் கூறுகிறார்.