தமிழ் மலர் தாக்கப்பட்டதற்குக் கண்டனம்

malarமஇகா  இளைஞர்    பிரிவு   உறுப்பினர்களால்    தமிழ்   மலர்   நாளிதழின் உரிமையாளர் மற்றும் அதன் தலைமை ஆசிரியர்  தாக்கப்பட்டதாகக்   கூறப்படும்   சம்பவத்தை   ஊடக  அமைப்புகள்   கண்டித்துள்ளன.

கிராக்கான்  மீடியா  மெர்டேகா (கெராம்)-வும்    மலேசிய   செய்தியாளர்   கழக (ஐஓஜே)மும்    உடல்ரீதியான    தாக்குதல்களுக்கு   இடமளிக்கக்   கூடாது  என்று  கூறின.

“அதிருப்தி   இருந்தால்   அதை    முறையான   வழிகளில்,  சட்ட  ரீதியான   வழிகளில்தான்    வெளிப்படுத்த   வேண்டும்”,  என    கெராம்   ஓர்  அறிக்கையில்   கூறியது.

“ஒரு  ஜனநாயக   நாட்டில்  தடையின்றியும்,  எத்தரப்புக்கும்   அஞ்சாமலும்   கடமைகளை  நிறைவேற்றும்  பொறுப்பு   ஊடகங்களுக்கு   உண்டு  என்பதையும்   சுட்டிக்காட்ட   விரும்புகிறோம்.

“அரசியல்   கட்சிகள்   ஊடகங்களுக்கு   அழுத்தம்  கொடுப்பதை   ஒருபோதும்  ஏற்பதற்கில்லை”,  என்றது   கூறிற்று.

நேற்று,   மஇகா  இளைஞர்   பிரிவினர்    “எதிரணிக்கு  ஆதரவாக”   செயல்படும்   தமிழ்  மலருக்குக்   நாளிதழுக்குக்  கண்டனம்    தெரிவிப்பதற்காக   அதன்  அலுவலகத்துக்குமுன்   திரண்டதாகக்  கூறப்படுகிறது.

அப்போது   ஏற்பட்ட   அமளியில்   தமிழ்   மலர்   உரிமையாளர்   ஓம்ஸ்   தியாகராஜனும்   அதன்   தலைமை    ஆசிரியர்   சரஸ்வதி   கந்தசாமியும்   தாக்கப்பட்டுக்  காயமடைந்ததாக  செய்தியாளர்  சி.கிறிஸ்ட்   தெரிவித்தார்.

ஆனால்,  சம்பவத்தின்போது   அங்கிருந்த   இளைஞர்,  விளையாட்டு  துணை  அமைச்சர்   எம்.சரவணன்   அப்படி   எதுவும்   நிகழவில்லை   என   மறுக்கிறார்.

ஊடகங்கள்   எந்த  அரசியல்  கட்சிக்கும்  எதிரிகள்   அல்ல,  ஊடகங்கள்   யாருக்கு  துணை   போக   மாட்டா,  அவற்றை   விலைக்கு  வாங்கவும்   முடியாது  என  கெராம்  கூறியது.

இத்தகைய    தாக்குதல்கள்   தொடர்வதற்கு   அனுமதிக்கக்  கூடாது    என்றும்   சம்பந்தப்பட    அதிகாரிகள்   உடனடி   நடவடிக்கை   எடுக்க   வேண்டும்   என்றும்   அது   வலியுறுத்தியது.