ஸெட்டி: கவர்னர் என்ற முறையில் ஜப்பார்தான் அதற்குப் பொறுப்பு

bnmபேங்க்  நெகரா  முன்னாள்   கவர்னர்   ஜப்பார்  ஹுசேன்    பேங்க்  நெகரா   கவர்னராக   இருந்த     காலத்தில்   மத்திய   வங்கியில்   என்ன   நிகழ்ந்திருந்தாலும்   அதற்கு  அவரே  பொறுப்பு. அப்பொறுப்பை  அவரும்  ஏற்றுக்கொண்டார்.

மத்திய   வங்கியின்  முன்னாள்  கவர்னர்    ஸெட்டி  அக்டார்  அசிஸ் ,   இன்று   பேங்க்  நெகராவின்  அன்னிய   செலாவணி  இழப்புமீது    விசாரணை   நடத்திவரும்  அரச  ஆணைய (ஆர்சிஐ)த்திடம்   இவ்வாறு  சாட்சியம்   அளித்தார்.

ஸேட்டியிடம்  ஆர்சிஐ  உறுப்பினர்  தாஜுடின்  அமின்,   பிஎன்எம்  கவர்னர்  “முழு  அதிகாரம்  படைத்தவர்”  ,  அப்படி   இருக்கையில்   அன்னிய  செலாவணியில்  இந்த   அளவு   இழப்பு   ஏற்பட   அவர்   எப்படி  அனுமதித்தார்,  அதற்கு   என்ன  காரணமாக   இருந்திருக்கும்   என்று  வினவினார்.

அதற்கு    ஸெட்டி,  “வங்கியில்   என்ன   நடந்தாலும்  அதற்கு  கவர்னர்தான்  முழுப்  பொறுப்பேற்க   வேண்டும்,  ஒரு  வணிக  வங்கியில்   இருப்பது  போலத்தான். ஏதாவது  ஒன்று  நடந்தால்   அது பற்றித்    தெரிந்தாலும்  தெரியாவிட்டாலும்  அதற்கு   அவர்தான்  பொறுப்பு”,  என்றார்.

இது   தவிர,  வங்கிகளிலும்    நிதி   நிதிக்   கழகங்களிலும்    வாரியமும்  நிர்வாகமும்  முக்கியமானவை   என்றும்  அவர்  சொன்னார்.

“பேங்க்  நெகரா  வாரியம்  சொல்கிறது   நிர்வாகம்   அதனிடம்  தகவல்   தெரிவிக்கவில்லை  என்று.  அதனால்  வாரியத்துக்கு  நிர்வாகத்தில்   நடப்பது   தெரியவில்லை.

“அதில்  அவருக்கு (ஜப்பாருக்கு)  எவ்வளவு   தெரியும்  அல்லது   அவருக்கும்  அதில்  பங்குண்டா   என்பது  பற்றியெல்லாம்   நான்  மதிப்பீடு   செய்ய  விரும்பவில்லை.

“ஆனால்,  அவர்  கண்ணியமான  முறையில்  பொறுப்பேற்று  பதவி  விலகினார்”,  என  ஸெட்டி  சுட்டிக்காட்டினார்.