மகாதிர்: ஜிஎஸ்டியை அகற்றி விட்டால், விற்பனை வரி மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்

 

Msalestaxஜிஎஸ்டி வரி அகற்றப்பட்டால், அதன் இடத்தில் மீண்டும் விற்பனை வரி விதிக்கப்பட வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் அவைத் தலைவர் மகாதிர் கூறுகிறார்.

ஜிஎஸ்டியை அகற்றி விட்டால் அரசாங்கத்தின் வருமானம் குறையும். அதனால் அரசாங்க நிதிகள் மீது ஏற்படும் தாக்கத்தை கூடிய வரை குறைப்பதற்கு இது அவசியமாகிறது என்று அவர் செய்தித்தளம் த மலேசியன் இன்சைட்டிடம் இன்று காலையில் கூறினார்.

“அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் கட்டம் கட்டமாகச் செய்யப்பட வேண்டும். ஜிஎஸ்டியை திடீரென்று அகற்றி விட்டால், வருமானத்திற்கான வழி இல்லாமல் போய்விடும். அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல என்று அவர் மேலும் கூறினார்.

அடுத்தப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜிஎஸ்டி அகற்றப்படும் என்று பக்கத்தான் ஹரப்பான் அளித்துள்ள உறுதிமொழி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மகாதிர் இவ்வாறு பதில் அளித்தார்.