‘பாரிசானுக்கு ஒரு ஓட்டுகூட இல்லை’, ஹிண்ட்ராப் 14-வது பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்யும்!


‘பாரிசானுக்கு ஒரு ஓட்டுகூட இல்லை’, ஹிண்ட்ராப் 14-வது பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்யும்!

waytha - harapanஎதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ‘பாரிசான் நேசனலுக்கு ஒரு ஓட்டுகூட இல்லை’ என ஹிண்ட்ராப்    இயக்கம் நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்யப்போவதாக அதன் தேசியத் தலைவர் வேதமூர்த்தி பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

அண்மையில், பிகேஆர் கூலாய் கிளை ஏற்பாடு செய்திருந்த, சுதந்திரத் தினத் தேநீர் விருந்தில் கலந்துகொண்ட பொ.வேதமூர்த்தி, தனதுரையில் இவ்வாறு பேசினார்.

“நம் அனைவருக்கும் தெரியும், 2008-ல் ஏற்பட்ட அரசியல் சுனாமிக்கு ஹிண்ட்ராப்பின் பங்களிப்பும் அளப்பரியது. இந்தியர்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட அப்பேரணி ஒரு முக்கியக் காரணம்.”

“2013 இல் நடந்தது ஒரு வருத்தத்திற்குரிய சம்பவம். நாங்கள் அப்போதைய மக்கள் கூட்டணியிடம்தான் முதலில் பேசினோம், ஆனால், அவர்களிடமிருந்து எங்களுக்கு நல்லதொரு பதில் கிடைக்கவில்லை. அதனால், பாரிசான் நேசனல் அழைத்தபோது, அங்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் நமக்கு ஏற்பட்டது,” என்றார் அவர்.

இந்தியர்களுக்கானச் சிறப்புத் திட்டங்கள்

“அரசியல் சாசனத்தில் நமது உரிமைகளை முறையாக எழுதி வாங்காததால், 60 ஆண்டுகள் நிறைவடைந்தும், இன்னும் இந்தியச் சமூகம் இந்நாட்டில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. 55 வருடங்களுக்கு முன் பெற்றிருக்க வேண்டிய உரிமைகளை, 5 ஆண்டுகளுக்கு முன் நான் கேட்டு வாங்கினேன்.”

“அந்த உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்டு, பாரிசான் அதில் கையெழுத்திட்டது. அதோடு மட்டுமல்லாமல், என்னைச் செனட்டராக நியமித்து, பிரதமர்துறை அமைச்சில் துணையமைச்சர் பதவியும் கொடுத்தது. ஆனால், 8 மாதங்கள் கடந்தும், ஹிண்ட்ராப் முன்வைத்த எந்தவொரு கோரிக்கையையும் அவர்கள் முன்னெடுக்காததால், சமுதாய நலன் கருதி, நான் என் துணை அமைச்சர் பதவியைத் தூக்கி போட்டுவிட்டு வந்தேன்,” என்று தனதுரையில் அவர் கூறினார்.

“பட்டம் பதவியைக் கொடுத்துவிட்டால், நாம் வாய்மூடி கிடப்போமென அவர்கள் நினைத்துவிட்டனர். என்றைக்கு ஒரு தலைவர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போகிறாரோ, அன்றே அவர் மக்களுக்குத் துரோகம் செய்தவர் ஆகிவிடுகிறார். எனவே, இன்று நான் சொல்கிறேன், நஜிப் மலேசிய இந்தியர்களுக்கு துரோகம் செய்துவிட்டார். எனவே, அவர் சார்ந்த பாரிசான் நேசனல் கூட்டணிக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாரும் வாக்களிக்காதீர்கள்,” என அங்கு கூடியிருந்த மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஹிண்ட்ராப்புடன் கையெழுத்திட்ட, புரிந்துணர்வு ஒப்பந்தத்தைblue print waytha நடைமுறைபடுத்த எந்தவொரு முயற்சியும் எடுக்காமல், தற்போது ம.இ.கா-வுடன் புதிதாக ‘இந்தியர் பெருந்திட்டம்’ ஒன்றை ஏற்படுத்தியுள்ளது பாரிசான். இதுவும் ஒரு பொதுத் தேர்தல் நாடகம் என்று வேதா வர்ணித்தார். தேர்தல் முடிந்ததும், இதுவும் அநேகமாக மறக்கப்பட்டுவிடும் என்றும் இந்தியர்களை அவர் எச்சரித்தார்.

கடந்த தேர்தலின் போது, மலேசிய இந்தியர்களின் பின்னடைவுக்குப் பாரிசான் அரசாங்கம்தான் காரணம் என்று கூறி, மன்னிப்பு கேட்டுகொண்டு, தங்கள் மீது ‘நம்பிக்கை’ வைக்கும்படியும், மீண்டும் தங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும்படியும் நஜிப் கேட்டுகொண்டதை வேதா நினைவுறுத்தினார். ஆனால், மக்கள் கொடுத்த வாய்ப்பை, அவர்கள் மீண்டும் பாழாக்கிவிட்டனர் என்றார் அவர்.

நம்பி ஏமாந்த இனம் நாம்

மலாயாவில், தோட்ட வேலை (விவசாயம்) செய்ய ஆள் தேவை என்று கிராமத்துத் தலைவர்கள் ஆசை காட்டியதை நம்பி, இந்தியாவிலிருந்து நம் முன்னோர்கள் இங்கு வந்தனர் என்று வேதா கூறினார்.

“இங்கு வந்து பார்த்தப் போது, செய்ய வந்தது விவசாயம் அல்ல என்பதைப் புரிந்துகொண்டு, கங்காணிகள், கிராணிமார்களை நம்பி, அவர்கள் கொடுத்த வேலையைச் செய்யத் தொடங்கினர்.”

“நாடு சுதந்திரம் அடையும் தருவாயில், இந்தியர்களின் பிரதிநிதி ம.இ.கா. , எனவே ம.இ.கா. அனைத்தையும் பார்த்துகொள்ளுமென துங்கு கூறியதை நம்பினோம்.”

“சுதந்திரத்திற்குப் பின், இந்தியர்களின் பிரதிநிதி என்று கூறிக்கொண்ட ம.இ.கா.வை நம்பினோம்.”

“கடந்த பொதுத் தேர்தலில், நஜிப்பை நம்பி பாரிசானுக்கு வாக்களித்தோம், அங்கும் நமக்கு மிஞ்சியது ஏமாற்றமே.”

“இப்படியாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை நம்பி நம்பியே இன்று நாம் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்,” என வேதமூர்த்தி கூறினார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீதான வழக்கு

மலேசிய இந்தியர்களின் பின்தங்கிய இன்றைய நிலைக்குப் பிரிட்டீஷ் அரசாங்கம்தான் காரணமெனக் குற்றம் சுமத்தி, 2007-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஹிண்ட்ராப்  ஒரு வழக்கைப் பதிவு செய்தது.

ஆகஸ்ட் 30, 2017-உடன், சரியாக 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை வேதமூர்த்தி நினைவு கூர்ந்தார்.

“அவ்வழக்கில் நாம் தோற்றுவிட்டோம், காரணம் நம்மிடமிருந்த ஆதாரங்களை முன்வைக்க முடியாத அளவுக்கு, அவர்கள் வழக்கை மூடிவிட்டனர். இருப்பினும், நான் மனம் தளரவில்லை. சில மாதங்களுக்கு முன் அவ்வழக்கை நான் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளேன். இன்னும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கண்டிப்பாக பிரிட்டிஷ் அரசாங்கத்தை நீதிமன்றத்தில் நிறுத்தி கேள்வி கேட்பது நிச்சயம்,” என அவர் கூறினார்.

டாக்டர் மகாதீருடனான சந்திப்பு

Waytha-TunMடாக்டர் மகாதிருடனான பேச்சு வார்த்தைக் குறித்து பேசுகையில், பக்காத்தான் ஹராப்பானில் ஏற்கனவே இருக்கும் 4 கட்சிகளுடன், தங்களையும் இணைத்துகொள்ள வேண்டும் என்று தான் அவரிடம் கேட்டதாக வேதா தெரிவித்தார்.

“பாரிசானில் 12 உறுப்புக் கட்சிகள் உள்ளன, பக்காத்தானில் 4 கட்சிகள் உள்ளன. பக்காத்தானைப் பலமான ஓர் எதிர்க்கட்சி கூட்டணியாக்க ஹிண்ட்ராப் இயக்கத்தையும் அதனுடன் இணைத்துகொள்ள வேண்டுமென நான் பக்காத்தான் ஹராப்பான் தலைவரான டாக்டர் மகாதீரைக் கேட்டுகொண்டேன்.”

“பக்காத்தானில் உள்ள இந்தியத் தலைவர்கள், இந்தியர்களுக்காகக் குரல் கொடுக்கிறார்கள். இருப்பினும், தோட்ட மக்களை நன்கு அறிந்தவர்கள், அவர்களின் உண்மையான பிரச்சனையைப் புரிந்தவர்கள் ஹிண்ட்ராப் மட்டுமே. ஆக, இந்தியர்களின், குறிப்பாக, தோட்ட மக்களின் தேவைகளுக்குக் குரல் கொடுக்க ஹிண்ட்ராப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென நான் அவரிடம் கேட்டுகொண்டேன்,” என அவர் கூறினார்.

அதற்காக நான் மட்டும்தான் சிறந்த தலைவன் என்று நான் கூறவில்லை. பக்காத்தானிலும், ஏன் அரசு சாரா இயக்கங்களில்கூட நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆக, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, பாரிசான் நேசனலின் 60 ஆண்டு காலஆட்சியை வீழ்த்த பணிசெய்ய வேண்டும்,” என்று அவர் தனதுரையில் கூறினார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • புலி wrote on 7 செப்டம்பர், 2017, 1:54

  நீங்கள் நஜிப் எப்படி ஏமாற்றினார் என்று சொல்லுகிறீர்கள்? நீங்களும் இந்தியர்களை ஏமாற்றி விட்டீர்களே? அது எப்படி?.
  இந்தியர்கள் ஓட்டு ஒன்றுகூட பாரிசானுக்கு இல்லை என்கிறீர்கள். இங்கும்- உங்களுக்கு, இண்ராப்புக்கு சீட் இல்லை என்றால், இந்தியர்களின் ஓட்டு ஒன்றுகூட பாரிசானுக்கு இல்லை என்ற உங்கள் நிலைபாடு மாறுபடுமா?

 • singam wrote on 7 செப்டம்பர், 2017, 8:40

  நல்ல முடிவு. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடக்கப்போவது நல்லவையாக இருக்கட்டும். தங்கள் சகோதரர் உதயகுமாருடன் ஒன்று சேர முயலுங்கள்.பி.எஸ்.எம். கட்சியும் சற்று இறங்கி வந்து பக்காத்தான் ஹரப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்த முயலுமேயானால் மேலும் நன்மை பயக்கும்.

 • RAHIM A.S.S. wrote on 7 செப்டம்பர், 2017, 10:43

  ‘பாரிசானுக்கு ஒரு ஓட்டுகூட இல்லை’ என ஹிண்ட்ராப் பிரச்சாரம்  செய்வது ஒருபுறமிருக்கட்டும்.
  முதலில் உங்களை-ஹிண்ட்ராப்பை  நம்பி இந்தியர்கள் ஓட்டு போடுவார்கள் என இன்னும்  நம்புகிறீர்களே அந்த தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள்.   

 • Tamilavan wrote on 7 செப்டம்பர், 2017, 12:42

  இந்துராப்பின் தமிழ் அர்த்தமென்ன ? “இந்துரிமை” என்று ஒருத்தரும் பேச மறுக்க என்ன காரணம் ? 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழர்கள் இந்துத்துவத்துக்கு சொந்தமா ? இந்துரிமை அரசியாலுகுமா ? BN க்கு பத்து ஒட்டு போனால் செத்தா போவீங்க ! இந்து என்ன மதத்திமிரு அரசியல் தம்பிகளா ????? RSS இந்துத்துவா ரா அரசியல் காட்டி இந்தியா மோடிக்கு கொட்ட தாங்க வேண்டாம் . சுயபுத்தியோட மலேசிய அரசியல் ஆடுங்கப்பா மண்ணாங்கட்டிகளா !!!!!!!

 • ஜி. மோகன்- கிள்ளான் wrote on 7 செப்டம்பர், 2017, 12:59

  திரு. வேதமூர்த்தி என்ன சொன்னாலும் அது வேத வாக்காக நாம் தமிழர்கள் எடுத்து கொள்ள வேண்டுமா. அரசியலில் இவர் போடும் வேஷம் ரொம்பவும் நல்ல தெரியுது. 2013 பொது தேர்தலில் இவர் பாரிசன் கட்சியில் கை கோர்த்த போது எத்தனை தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் தெரியுமா இவருக்கு. அப்போது. சுயநலம் கொண்டு ஒரு சில தலைவர்களை வைத்து கொண்டு சோரம் போனாரே. அப்போது ஹிண்ட்ராப் என்ற அமைப்பை தொடங்கிய ஒரு சில நல்ல உள்ளங்கள் ஏன் உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா. திரு. உதயகுமார் போன்ற நல்ல உள்ளங்கள் ஜெயிலில் அடைபட்டு கொண்டு இருந்த சமயத்தில் நீங்கள் வெளியூர் சென்று ஓடி ஒளிந்து கொண்டிர்கள். பாவம் திரு. உதயகுமார் அவருடன் இருந்த தலைவர்கள் ஜெயலில் ரொம்பவும் துன்பபட்டர்கள். இன்று இப்போ இவர் துன் மகாதீர் அவர்களிடம் கை கோர்த்துக் தமிழர்களின் வாக்கு எதிர்க்கட்சிக்கு போடுங்கள் என்று சொல்கிறார். நாங்கள் என்ன மாங்க மடையன்கள இவர் என்ன சொன்னலும் கேட்டு அப்படியே செய்வதற்கு. திரு. உதயகுமார் மற்றும் ஹிண்ட்ராப்காக போராடி ஜெயலில் இருந்த தலைவர்களை ஏன் நீங்கள் இப்போது கூப்பிடவில்லை. சரி நீங்கள் இப்போ கூப்பிட்டும் அவர்கள் வரவில்லை என்றே வைத்து கொள்வோம் இந்த பேச்சு வார்த்தைக்கு. அடுத்து பிரதமர் தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறும் நீங்கள் துன் மகாதீர் அவர் காலத்தில் தமிழர்களுக்கு செய்த நன்மைகளை சொல்லலாமே என்னவென்று. என்னை கேட்டால் துன். மகாதிர் விட பிரதமர் நஜிப் அவர்களே தமிழர்களுக்கு அதிகமா செய்து உள்ளார் என்று சொல்வேன். பிரதமர் நஜிப் நமக்காக கொடுத்த பணத்தை நமது தாய் கட்சி எவ் வகையில் சரியான முறையில் செலவு செய்தது என்று கணக்கு கேளுங்கள் திரு. வேதமூர்த்தி அவர்களே. உண்மையான குடிமகன் அதுவும் நீங்கள் ஒரு வக்கீல் நிறைய சட்டங்கள் தெரிந்து படித்து இருபிர்கள். கேட்கலாமே. அதை விடுது நஜிப் மலேசிய இந்தியர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சேவல் கோழி கலையில் கூவது போன்று கூவி எங்களை எழுப்ப வேண்டாம். நாங்கள் நன்றாகவே விழித்துக் கொண்டு எது நன்மை தீமை தெரியும் என்று புறிந்து வைத்து உள்ளோம். நாம் நம்பி ஏமாந்த இனம் இல்லை அனால் ஏமாந்து ஓட்டு போட்டு ஏமாந்து போனோமே தாய் கட்சிக்கு அதுதான் நாம் செய்த பெரிய தீமை. மறுபடியும் நான் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளேன் என்று உளறிக்கொட்டி கொண்டு இருக்காமல் இருந்தாலே போதும்மைய சாமி.

 • TAPAH BALAJI wrote on 7 செப்டம்பர், 2017, 14:09

  வேதா அவர்களே ! மீண்டும் மீண்டும் கோளாறு பண்ண ஆரம்பித்து விட்டீர் !! பரவாயில்லை,நடப்பது நடக்கட்டும்.விதி அப்படியானால் தடுப்பவர் யார் ? சரி போனதெல்லாம் போகட்டும்,இப்போதுதான் நல்ல சமயம்,உங்களால் அந்த உதவியை நிச்சயமாக இந்திய சமுதாயத்துக்காக செய்ய முடியும். இதை கூட செய்யமுடியவில்லை என்றால் பிறகு எப்படி ? இப்பொழுதுதான் நீங்களும் கேனையன் மகாதீரும் ஒரே ரூம்பு போட்டுக்கொள்ள ஆசைப்பட்டுவிட்டீர்களே, அதனால் இந்த உதவியை நீங்கள் இந்த இளிச்சவாய் சமுதாயத்துக்கு செய்தே ஆகவேண்டும்.ஆதாவது, சில ஆண்டுகளுக்கு முன்னாள் அப்போதைய PAS அரசாங்கதின் முன்னால் பேராக் மந்திரி பெசார் நிஜார் அவர்களின் கூற்றுப்படி, “ பர்மா மரண ரயில் பாதையில்” மரணமடைந்தவர்களுக்கும், அதில் சித்திரவதை அனுபவித்தவர்களுக்கும், ஜப்பான் அரசாஙத்தினால் RM 207 BILLION நஷட ஈடாக,மகாதீர் ஆட்சி காலத்தில் அவரிடம் கொடுக்கபட்டதாக சொல்லியிருந்தார்! அந்த மரண ரயில் பாதையில் இந்தியர்கள் 45 சதவிகிதம் பேர் வேலை செய்து துன்பப்பட்டதாக ஆவனங்கள் வழி தெரியவருகிரது.அரசாங்க கருவூளத்துக்கு போய் சேறாத அந்த பிரமாண்டமான பணம் எங்கு சென்றது என்று உங்கள் புது கூட்டாளியிடம் கேட்டு கொஞம் சொல்லுங்களேன். அதில் ஒரு சிறு தொகையாக 20 பில்லியன் ரிங்கிட் அன்பளிப்பாக மகாதீர் கொடுத்தார் என்றால், உங்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு கோயில் கட்ட இந்த சமுதாயம் கடமை பட்டிருக்கும்.

 • vin???vin??? wrote on 7 செப்டம்பர், 2017, 14:11

  அறிவுக்கு ஒவ்வாத வாதங்கள் . நடப்பு நிலை -,நடப்பு நிலை -,நடப்பு நிலை -தமிழ்ப்பள்ளி தமிழ் பள்ளி என்று மார்தட்டி கொண்டால் போதும் என்று பாரிசான் அரசாங்கம் நம்மளை எடைபோட்டுவிட்டது .மா யீ கா கா கா என்று நஜிப்பின் கா கா வில் கரைந்து போக துளிர் விட்டு விட்டது . அவர்களின் ஒரே எண்ணம் தமிழ் மக்கள் தொட்டுக்க ஊறுகாய் . அவரவர் சம்பாதிக்க தான் கட்சி . எங்கெங்கு எவ்வளவு வாங்கலாம் , எந்தெந்த இலாகாவில் பணம் கறக்கலாம் என்பது தான் தொகுதிகளின் பேச்சு . தமிழ் பள்ளி அப்பாற்பட்ட நிலையில் தமிழர்களுக்கு நாமம்தான் . மாற்று இனத்தை சேர்ந்த கட்சிகள் எதிர்காலத்துக்கு புகுந்து விட்டனர் . நாம் இன்னும் குண்டு சட்டிக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கிறோம் . நமக்கு பாராட்டு விருந்துகள் போதும் என்று பாரிசான் அரசாங்கம் நம்மை குளிப்பாட்டி கொண்டிருக்கிறது .ஒரு முறை எதிர்கட்சிக்கு வாக்களிப்போம் . என்னதான் நடக்கிறது என்று பாப்போம் . இன்னுமா நமக்கு சொரணை வரவில்லை . அறுபது ஆண்டு கடந்தும் கெஞ்சும் கூட்டமா நாம் .

 • அறிவுமதி wrote on 7 செப்டம்பர், 2017, 16:24

  ஐயா சிங்கம் அவர்களே,
  நீங்கள் புரிந்துதான் பேசுகிறீர்களா, இல்லை புரியாமல் பிதற்றுகிறீர்களா, தெரியவில்லை. பி.எஸ்.எம். எத்தனை முறை விளக்கப்படுத்திவிட்டது…..ஹராப்பான் தங்களை அழைக்கவே இல்லை என்று, முக்கியத் தலைவர்கள் சொல்லிகூட அது செவிசாய்க்கவே இல்லை, பிறகு என்ன செய்ய சொல்கிறீர்கள்?
  அந்த சிறு கட்சியின் மேல் நீங்கள் காட்டும் ஆர்வம் இருக்கிறதே, அப்பப்பா சொல்லி மாலாது! அண்மையில் பி.எஸ்.எம். அருட்செல்வன் விடுத்த அறிக்கையைப் பார்த்தீர்கள் தானே? போய் உறுப்படியா ஏதாச்சும் வேல இருந்தா பாருங்க, சும்மா பி.எஸ்.எம்.2-னு பிதற்றாதீங்க.
  ஏன் உங்க ஏரியாவுல அவுங்கல உங்களால சமாளிக்க முடியாமா , இங்க வந்து உலர ஆரம்பிச்சுட்டீங்களோ?

 • singam wrote on 7 செப்டம்பர், 2017, 19:51

  அம்மா அறிவுமதி! உங்க அறிவுரைக்கு மிக்க நன்றிங்க. நீங்க சொல்வதைப்போல எங்க ஏரியாவுல உங்கள  சமாளிக்க முடியல. போன முறை எங்க ஜெலாப்பாங் தொகுதியில் உங்க தேசிய துணைத்தலைவர் போட்டியிட்டு 2,568 வாக்குகளை எடுத்து, டிபாசிட் இழந்துவிட்டார். இந்த முறையாவது டிபாசிட் கிடைக்குமா என பாருங்கள். மீண்டும் டிபாசிட் இழப்பீர்களானால் மீண்டும் உளற ஆரம்பித்துவிடுவேன்.  

 • s.maniam wrote on 7 செப்டம்பர், 2017, 21:31

  ம .இ .கா . 60 ஆண்டுகளாக இந்தியர்களை ஏமாத்தியது என்றால் ! துன் .சம்பந்தன் ! மாணிக்கவாசகம் ! இவர்கள் ஏமாத்தினார்கள் என்கிறீர்களா ! ஐயா வேத அரசியல் தெரியவில்லை என்றால் முதலில் கத்துக்கொண்டு வாரும் !! செனட்டர் கொடுத்து , துணை அமைசர் கொடுத்து , இந்திய சமுதாயத்திற்கு உதவ வாய்ப்பு கிடைத்தும் ! தானும் படுக்க வில்லை , தள்ளியும் படுக்க வில்லை ! கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி உருப்பட தெரியாத நீயெல்லாம் இந்த சமுதாயத்தை எப்படி காப்பாத்த போகிறாய் ! கேட்ட தொகை கிடைக்கவில்லை என்றுதானே பதவியை துறந்தாய் ! முதுகெலும்பு இல்லாத உனக்கெல்லாம் எதுக்கு பதவி !! ஐநா சபையெல்லாம் பத்தி பேசி தோட்டத்து காரனை இனியும் ஏமாத்த முடியாது !! உன்னை போல் அரசியல் அரை வேக்காடாய் எல்லாம் நம்பி களத்தில் இறங்கி அவமானப்பட்ட எங்களைத்தான் செருப்பால ! அதுவும் தெஞ்ச செருப்பால அடிக்கணும் ! நீ சொல்லித்தான் யாருக்கு ஒட்டு போடணும் என்று மக்கள் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது ! இந்திய சமுதாயம் முட்டாள் சமுதாயம் என்று முடிவு பண்ணி விட்டாயா !!

 • abraham terah wrote on 8 செப்டம்பர், 2017, 9:31

  மணியம் சார்! இதையும் கொஞ்சம் கேட்டுக் கொள்ளுங்கள். வேதாவை செயல்பட முடியாதபடி செய்தவர்கள் ம.இ.கா. வினர். அவர்கள் கொஞ்சம் ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் நிச்சயமாக அவர் ஒருசில நல்ல காரியங்களை செய்திருப்பார். ம.இ.கா. இருக்கும் வரை தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்ததும் அவர் பதிவிலிருந்து விலகிக் கொண்டார். அவர் வெளி நாடுகளுக்கெல்லாம் போய் எதையாவது இந்தச் சமுதாயத்திற்கு செய்யும் முடியும் என்றால் செய்யட்டுமே. நமக்கு ஒன்றும் நஷ்டம் இல்லையே!

 • TAPAH BALAJI wrote on 8 செப்டம்பர், 2017, 16:43

  FATHER OF FAITH என்ற புகழை கொண்ட பெயருடைய ABRAHAM TERAH அவர்களே, பெயருக்கு ஏற்ராற்போல் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர் போலும்.SEDIC அமைப்பை தோற்றுவித்தமுனைவர் ராஜேந்திரன், ஆரம்பத்தில் அவரும் அந்த கட்சியிலிருந்து மறைமுக எதிர்ப்புகளைசந்தித்தவர்,சமாளித்து இன்று ம.இ.கா காரர்களைவிட ஒரு படி கூடவே புகழோடு இருக்கார் ! மக்களுக்கு தொண்டு செய்ய நினைத்து விட்டால் ” வேணும் என்றால் பிலாக்காய் வேரிலும்காய்க்கும் ” என்பார்கள் நமது அறிஞர்கள் !!

 • s.maniam wrote on 9 செப்டம்பர், 2017, 12:37

  செயல் பட வேண்டும் ! சமுதாயத்திற்கு தொண்டு புரியவேண்டும் என்று பொது நலத்திற்கு வந்து விட்டால் ! யார் தடுத்தாலும் ! பின்வாங்காமல் செயல் பட வேண்டும் ! அவன் தான் மக்கள் தொண்டன் ! இவருக்கு தோல் கொடுத்து சிறைக்கு சென்ற வர்களெல்லாம் எங்கே ! அவர்களுக்கு இவர் எந்த வகையில் இவரின் நன்றியை புலப்படுத்தினார் !! அய்யா ஆபிரகாம் எல்லாம் சுயநலம் ! சுயநலம் !!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: