போரெக்ஸ் வணிகம் நடக்கும் இடத்துக்கு மகாதிர் வந்ததில்லை- முன்னாள் வணிகர்

dr mமுன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்,    அன்னிய  செலாவணி   வணிகம்  நடைபெறும்  இடத்துக்கு   வந்ததே  இல்லை   என   மத்திய   வங்கிக்காக   போரெக்ஸ்   வணிகம்  செய்த    முன்னாள்  வணிகர்  ஒருவர்  கூறினார்.

1980-இலும்  1990  முற்பகுதியிலும்  மத்திய வங்கிக்கு  ஏற்பட்ட   வெளிநாணயச்  செலாவணி  இழப்பு  குறித்து   விசாரணை   செய்யும்  அரச  ஆணையத்திடம்   1988க்கும்  98க்குமிடையில்  வெளிநாணயச்  செலாவணி   வணிகம்   செய்து   வந்த   அஸ்மான்   மாட்   அலி   இன்று  சாட்சியம்   அளித்தார்.

அவரிடம்  ஆர்சிஐ  உறுப்பினர்    சாவ்   சூ   பூன்,  முக்கிய  பிரமுகர்கள்   அல்லது  அப்போதைய  பிரதமர்   அவரைப்  பார்க்க   வந்ததுண்டா  என்று   வினவினார்.

“யாரும்  வந்ததாக    நினைவில்லை”,  என  அஸ்மான்   கூறினார்.

பின்னர்  மகாதிரின்   வழக்குரைஞர்   முகம்மட்  ஹனிப்   கத்ரி,    மகாதிர்   வெளிநாணய  வணிகம்   நடைபெறும்  இடத்துக்கு   வந்திருக்கிறாரா   என்று   கேட்டார்.

“வந்ததே  இல்லை”,  என்றார்   அஸ்மான்.