‘பாஸுக்கு ஓட்டுபோடுவது, பாரிசானுக்குப் போடுவதற்குச் சமம்’ – பாஸுக்கு மகாதீர் பதிலடி

mahathir-khalilஎதிர்வரும் பொதுத் தேர்தலில், பாஸுக்குப் போடும் ஓட்டு, பாரிசானுக்குப் போட்டதற்குச் சமம் என்று டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.

நேற்று, பாஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் முஹமட் காலில் அப்துல் ஹாடி, பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களிப்பது, டிஏபி-க்கு வாக்களிப்பதற்குச் சமம் என்று கூறியதற்கு, மகாதீர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

“பாஸுக்கு வாக்களிப்பது, பாரிசானுக்கு வாக்களித்து, நஜிப்பைத் தொடர்ந்து ஆட்சியில் வைத்திருப்பதற்குச் சமம்,” என்று ஹராப்பானின் தலைவருமான மகாதீர் கூறினார்.

முன்னதாக, டிஏபி-யின் நடவடிக்கைகள், ஹராப்பான் கூட்டணியில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், அக்கூட்டணியின் ஒவ்வொரு முடிவையும் அவர்கள்தான் தீர்மானிப்பது போல் உள்ளது எனவும் காலில் கூறியிருந்தார்.