பேரரசர் பிறந்தநாளை முன்னிட்டு, தலைமை நீதிபதிக்கும் சாமிவேலுவுக்கும் ‘துன்’ விருது


பேரரசர் பிறந்தநாளை முன்னிட்டு, தலைமை நீதிபதிக்கும் சாமிவேலுவுக்கும் ‘துன்’ விருது

துன்இன்று, மாட்சிமை தங்கியப் பேரரசர், சுல்தான் முஹமட் V அவர்களின் பிறந்த நாளையொட்டி, தேசிய உயர்மட்ட விருதான ‘துன்’ விருதை, நாட்டின் மூன்று முக்கிய நபர்கள் பெறுகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 4-ல், நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முஹமட் ராவுஸ் ஷாரிஃப், இந்தியா, தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதர் ச.சாமிவேலு மற்றும் முன்னாள் அமைச்சர் மைக்கல் சென் விங் சும் ஆகியோரே இந்த ‘துன்’ விருதை பெறும் மூவர் ஆவர்.

இவர்களோடு, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், தேசியப் போலிஸ் படைத் தலைவர், மலேசிய இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் உட்பட, 1,518 பேர் இன்னும் பிற விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • singam wrote on 9 செப்டம்பர், 2017, 7:25

  துன் சாமிவேலு அவர்களால் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு எந்த நன்மையையும் பெறப்பட்டதாக தெரியவில்லை. இருப்பினும் துன் வீ.தி. சம்பந்தனுக்கு பிறகு இந்த உயரிய விருது, ஓர் இந்தியருக்கு கிடைக்கப் பெற்றதில் நாம் பெருமை கொள்வோமாக. 

 • singam wrote on 9 செப்டம்பர், 2017, 8:03

  45 ஆண்டுகளுக்கு முன் என் கையால் கல்லடிப்பட்டவர் (சிறிய கல்) மைக்கல் சென், இன்று துன் பட்டம் பெறுவதில் எனக்கு சற்று மகிழ்ச்சியே. 1972 ல் உளு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல். ம.சீ.ச. (தே. முன்னணி) சார்பில் போட்டியிட்டவர் இந்த மைக்கல் சென். டி.ஏ.பி. சார்பில் போட்டியிட்டவர் லாவ் டாக் கீ என்பவர். (பின்னாளில் இவர் ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.) அவ்வமயத்தில் மைக்கல் சென் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது டி,ஏ.பி. க்கு பிரச்சாரம் செய்யும் ஒரு சில இளைஞர் கூட்டமாகிய நாங்கள் இந்த குறும்பு வேலையினை செய்தோம். (அந்நாளில் இதெல்லாம் சகஜம்) பிடிப்பட்டோம். சிறிய அளவில் உதையும் வாங்கினோம்.  அதேபோன்று, 21-5-1986 ல் சுங்கை சிப்புட் ரெக்ஸ் திரையரங்கில் டி.ஏ.பி. யின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். நான்தான் முதல் பேச்சாளன். எனக்கு பிறகு பேசவேண்டியவர்கள்., பட்டு,டேவிட், குப்புசாமி, பாக்கியநாதன், காளிமுத்து, ஜெகந்நாதன், என 12 பேர் கொண்ட  குழு. நான் மேடையில் பேசிக் கொண்டு இருந்தபோதே. கீழேயிருந்து சாமிவேலுவால் அனுப்பப் பட்ட ரௌடி கூட்டத்திலிருந்து ஒரு கல் வந்து என் மீது பாய்ந்தது. என்ன ஒற்றுமை பாருங்கள். என்னால் கல்லடிபட்ட ஒருவரும், எனக்கு கல்லடி கொடுத்த ஒருவரும், இன்றைய தினத்தில் “துன்”.  

 • [email protected] wrote on 9 செப்டம்பர், 2017, 8:40

  மிக்க மகிழ்ச்சி. நன்று .

 • RAHIM A.S.S. wrote on 9 செப்டம்பர், 2017, 10:26

  ஒரு இந்தியர் என்ற வகையில் சாமிவேலுக்கு “துன்” விருது பெற்றதற்கு பாராட்டுக்கள் ஆனால் ஒரு தமிழர் என்ற முறையில் தமிழர்களுக்கு சேவையாற்ற கிடைத்த பொன்னான வாய்ப்பை தனக்கும் தனது குடும்பத்தினர் / நண்பரகளுக்காக சேவையாற்றியது மட்டுமில்லாமல், அரசாங்கத்தின் மூலமாக  தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் / உரிமைகளை, தனது குடும்பத்தினர் / நண்பரகளுக்கு மட்டுமே போய் சேர வேண்டும் என்று தமிழர்களை தியாகம் செய்த சாமிவேலுவை பாராட்ட முடியவில்லை.   

 • en thaai thamizh wrote on 9 செப்டம்பர், 2017, 13:21

  நான் இந்த “பட்டதாரி ” களை என்றைக்கும் மதித்தது கிடையாது– மதிக்கவும் மாட்டேன்.பெரும்பாலோர் திருட்டு நாதாரிகள். அதுவும் நம்ப “தூணை” பற்றி சொல்ல என்ன இருக்கிறது. நம்மை எல்லாம் சுரண்டியதற்கு அரசு கொடுக்கும் அங்கீகாரம். மூன்றாம் உலக சப்பி.

 • en thaai thamizh wrote on 9 செப்டம்பர், 2017, 13:23

  இதில் மகிழ்சியடைய ஒரு மண்ணும் கிடையாது.

 • Beeshman wrote on 9 செப்டம்பர், 2017, 16:26

  தகுதியுடையோற்கு தரப்படும் விருதானால் நமக்கெல்லாம் ஆனந்தமே. இந்தியர் என்ற அளவில், எண்ணிக்கை முக்கியமல்ல. பொதுநலம் கருதிய சிறப்பான சேவைக்கே முதலிடம். உதவிப் பெற்றவர் உயர்த்திப் பேசுவார். மாறாக உதை வாங்கியவர் என்ன பேசுவார் ?

 • ஜி. மோகன்- கிள்ளான் wrote on 9 செப்டம்பர், 2017, 20:18

  இதில் மகிழ்ச்சி அடைய ஒட்டு மொத்த மலேசியா தமிழர்களை கேட்டால் தெரியும்……….

 • MOHAN mohan wrote on 10 செப்டம்பர், 2017, 10:47

  அடே எங்கப்பா ,,துன் விருது ?
  ஆமாம் ஆமாம் கொடுக்க வேண்டியதுதான் ,அப்படி என்னத்த செஞ்சி கிழிச்சாறு,ஆமாம் நிறையா செஞ்சிருக்காரு நடிகை மீனாவுக்கு OOPS சாரி ,,நடிகை என்று சொல்லி விடுத்தேன் .மீன் வியாபாரி மீனவனுக்கு என்று சொல்ல வந்தேன்

 • MOHAN mohan wrote on 10 செப்டம்பர், 2017, 10:49

  இவன் மூஞ்சும் முகர கடடையும்..அ—ல-Oக்க

 • abraham terah wrote on 10 செப்டம்பர், 2017, 11:26

  வாழ்த்துவதற்கு மனம் வரவில்லை. மனம் இருண்டு விட்டது!

 • மலேசியன் wrote on 10 செப்டம்பர், 2017, 12:53

  “இந்திய சமுதாயத்திற்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து – Selliyal – செல்லியல்

 • en thaai thamizh wrote on 10 செப்டம்பர், 2017, 14:45

  ஐயா abraham terah அவர்களே – நம்மை ஓரங்கட்டுவதற்கு துணை போன நாதாரியை – நம் ஏழை மக்களின் பணத்தை திருடிய கம்மனாட்டிக்கு என்ன வாழ்த்துக்கள் வேண்டி கிடக்கிறது? இன்னும் எவ்வளவோ– இவனால் 30 ஆண்டுகளுக்கு பின் ஆயிரத்தில் 800 வெள்ளிக்காக ஜோகூர்பாருவில் இருந்து சிறிய மோட்டார் சைக்கிளில் 10 மணி நேரம் பயணம் செய்த (வந்து-போக) எனக்கு தெரியும் இந்த நாதாரி பண்ணியது. abraham terah இவனைப்போன்ற கம்மனாட்டிக்கு வக்காலத்து வாங்க வேண்டாம். வாங்கினாலும் உங்களின் விருப்பம். ஏமாற்றப்பட்ட வர்களுக்கு புரியும். அதிலும் இந்த பட்டம் அம்னோ நக்கிகளுக்கு தான் கிடைக்கும். கர்பால் இந்த நாட்டிற்கு செய்தது-டேவிட் இந்த நாட்டிற்கு செய்தது எவ்வளவோ அதிகம்– அவர்களுக்கு எந்த பட்டம் கிடைத்தது?

 • seliyan wrote on 11 செப்டம்பர், 2017, 20:42

  தேர்தல் காலம். அரசியலில் இதெல்லாம் சகஜம்.இந்தியர்கள் விழித்து கொண்டால் நல்ல எதிர்காலம் வரலாம். இல்லேயேல் பழைய தொடர்கதைதான். காலம் சென்ற முன்னாள் தலைவர் சம்பந்தன் அவர்கள் முயற்சியால் உருவானது கூட்டுறவு சங்கம். இன்று தலைநகரில் உயர்ந்து நிற்பது சங்கத்தின் கட்டிடம்.அன்னாருக்கு துன் விருது வழங்கியது நியாயமானது.

 • en thaai thamizh wrote on 12 செப்டம்பர், 2017, 11:09

  ஐயா seliyan அவர்களே அது யாருடைய பணம்? என்னைப்போன்ற எத்தனை பேரிடம் பொய் சொல்லி சுருட்டியது? எது நியாயம்? நீர் எவ்வளவு பாதிக்கப்பட்டீர்?

 • KADARAN wrote on 2 அக்டோபர், 2017, 21:11

  வாழ்துக்கள் துன் ச. சாமிவேலு அவர்களே …………..

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: