ராஜா மூடா கெடாவின் புதிய சுல்தான்

kedah raja mudaகெடாவின்  ராஜா  மூடா   துங்கு  சலேஹுடின்  அல்மர்கும்  சுல்தான்  பாட்லிஷா,  கெடாவின்   புதிய   சுல்தானாக  இன்று   பிரகடனப்படுத்தப்பட்டார்.  துங்கு   சலேஹுடின்   நேற்று   காலமான   சுல்தான்   அப்துல்   ஹாலிம்  முவாட்ஸாம்  ஷாவின்   இளவல்   ஆவார்.

அவர்  கெடாவின்  29வது  சுல்தானாக   ஆட்சியில்  அமர்கிறார்.    59  ஆண்டுகள்   கெடாவை   ஆண்ட   சுல்தான்  அப்துல்   ஹாலிம்,   நேற்று   பிற்பகல்   மணி   2.30க்கு   இஸ்தானா    அனாக்  புக்கிட்டில்   காலமானார்.