‘மலேசியாவைச் சீனா ஆளவில்லை’, மசீச தலைவர் கூறுகிறார்

Liow-Tiong-Lai-chinaஇன்று, போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய், சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டு முதலீட்டையே மலேசியா அதிகம் நம்பியிருக்கிறது என்று குறைகூறும் சில தரப்பினரைச் சாடினார்.

வெளிநாட்டு முதலீடுகள் மூலம், சீனா மலேசியாவை ஆக்கிரமிக்கவில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் காரணங்களுக்கானவை மட்டுமே என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமீப காலமாக, சீனாவின் முதலீடுகள் அதிகரித்து வந்தாலும், அவை நம் நாட்டின் வெளிநாட்டு முதலீடுகளில் மிகப்பெரியது அல்ல என்று லியோ மேலும் விளக்கப்படுத்தினார்.

“மலேசிய முதலீடுகளில், சீனா முதல் இடத்தில் இல்லை. அது மற்ற நாடுகளின் பின்னாலேயே இருக்கிறது. நம்மிடம் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் முதலீடுகளும் இருக்கின்றன,” என்றார் அவர்.

“ஒருசிலர், சீனா தன் முதலீடுகளால் மலேசியாவை ஆக்கிரமித்து வருகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர், ஆனால், அது உண்மை அல்ல. அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் இவ்வாறு குறை பேசி வருகின்றனர்,” என்று மசீச தேசியத் தலைவருமான லியோ, இன்று நிருபர்களிடம் பேசினார்.